விளையாட்டு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை, ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
விளையாட்டு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை, ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி (தன்னாட்சி), திருச்சிராப்பள்ளி சமூகப் பணித் துறை மற்றும் CSI மிஷன் பொது மருத்துவமனை, உறையூர் ஆகியவை இணைந்து, சாம்பியன்களுக்கான தன்னம்பிக்கை மற்றும் ஊட்டச்சத்தை வளர்த்தல் என்ற தலைப்பில் விளையாட்டு மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை பிஷப் ஹீபர் கல்லூரியின் உள் விளையாட்டு அரங்கில் நடத்தின. நிகழ்ச்சிக்கு பிஷப் ஹீபர் கல்லூரியின் விரிவாக்கப் புல இணை முதன்மையர், இணைப் பேராசிரியர் மற்றும் சமூகப் பணித் துறை ஒருங்கிணைப்பாளர் முனைவர் எம். கேப்ரியல் தலைமை உரையாற்றினார்.
CSI மிஷன் பொது மருத்துவமனை, உறையூர், திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த டாக்டர் ஆர். ராஜ்குமார் MD (சமூக மருத்துவம்) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களிடையே ஊட்டச்சத்து, நோய்த்தடுப்பு மருத்துவம், போதுமான தூக்கம், புரதச்சத்து உட்கொள்ளுதல், முழங்கால் வலி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். நிகழ்ச்சியின் போது பெண் விளையாட்டு மாணவர்கள் மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் ஒழுங்கின்மை உள்ளிட்ட பல்வேறு உடல்நலம் தொடர்பான கேள்விகளை எழுப்பினர். அதற்கு டாக்டர் ஆர். ராஜ்குமார் விளக்கமளித்து, மாணவர்களின் உடல்நலம் தொடர்பான சந்தேகங்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார். இதன் மூலம் மாணவர்கள் தங்களது உடல்நலம் குறித்து மருத்துவரிடம் நேரடியாக கேள்விகள் கேட்டு தெளிவு பெற்றனர். CSI மிஷன் பொது மருத்துவமனையின் ஆலோசகரும், PRO-வுமான திருமதி. வி. ஆனி கிறிஸ்டபெல் வாழ்த்துரை வழங்கினார். மேலும், விளையாட்டு மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் சுவாரஸ்யமான விளையாட்டு ஒன்றை நடத்தினார். இதில் மாணவர்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் விளையாட்டு மாணவர்கள் சுமார் 90 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். மாணவர்களிடையே தன்னம்பிக்கை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை சமூகப் பணித் துறையின் மூன்றாம் ஆண்டு இளங்கலை சமூகப் பணி மாணவர்கள், சமூகப் பணித் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் வி. ஜான்சி வில்லியம் மற்றும் CSI மிஷன் பொது மருத்துவமனையின் ஆலோசகரும், PRO-வுமான திருமதி. வி. ஆனி கிறிஸ்டபெல் ஆகியோரின் வழிகாட்டுதலுடன் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0