தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

Sep 18, 2026 - 13:18

தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் ஆவின் தலைவருமான கார்த்திகேயன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டி.ரத்தினவேல், பகுதி செயலாளர் மோகன் மற்றும் நிர்வாகிகள் அம்மா பேரவை மாநில துணை செயலாளர்கள் அரவிந்தன், டி.ஆர். சுரேஷ்குமார், பேரவை மாவட்ட செயலாளர் பொன்னார், மகளிர் அணி செயலாளர் வனிதா, மாவட்ட துணை செயலாளர் ஜெயஸ்ரீ, மகளிர் அணி மாவட்ட துணை செயலாளர் தீபா, பொதுக்குழு உறுப்பினர் தென்னூர் அப்பாகுட்டி, கலை பிரிவு தினேஷ், மாணவரணி பாலமோகன்ராஜ்,

பகுதி செயலாளர்கள் வரகனேரி ராஜேந்திரன், பாலாஜி, ஜான் எட்வர்ட், திருநாவுக்கரசு, பிஎம்.குமார், சுரேஷ்குப்தா, சுதாகர், இலியாஸ், ராஜ்மோகன், பாலாஜி, திருநாவுக்கரசு, சிந்தாமணி மகாதேவன், கிராப்பட்டி கமலஹாசன், வசந்தம் செல்வமணி, கல்லுக்குழி சுந்தர் சிங், முத்துக்குமார், செல்லப்பா, மோகன், எடத்தெரு பாபு உள்ளிட்ட பகுதி, வட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0