திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதுகலை சமூகப்பணித்துறை சார்பில் பலூரில் இணைய குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

Sep 29, 2026 - 20:11
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதுகலை சமூகப்பணித்துறை சார்பில் பலூரில் இணைய குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதுகலை சமூகப்பணித்துறை சார்பில் பலூரில் இணைய குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப்பணித்துறை முதுகலை (MSW) மாணவர்கள் சார்பில், திருச்சி பலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இணைய குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சைபர் குற்ற காவல்துறை அலுவலர் நந்தகோபால் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, கிராம மக்களுக்கு இணைய குற்றங்கள், ஆன்லைன் மோசடிகள் மற்றும் சமூக ஊடகங்களை பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், தற்போதைய சமூகத்தில் காணப்படும் இணைய குற்றப் பிரச்சினைகள் குறித்தும், அவற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விளக்கினார். இந்நிகழ்ச்சியில் பலூர் கிராம மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும், இணைய குற்ற விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சி பொதுமக்களிடையே இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, சமூகப்பணித்துறை மாணவர்களுக்கு சிறந்த கள அனுபவத்தையும் வழங்கியது. இந்நிகழ்ச்சிக்கான பாசறை ஆலோசகராக சமூகப்பணித்துறை உதவி பேராசிரியர் அ. சாம்சன் இருந்தார். முதுகலை சமூகப்பணி துறை மாணவர்கள் ஆனந்த்சங்கர். பாலாஜி. சத்தியவிரதன். மற்றும் நமிதா. ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்தினர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0