மனிதநேய தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த வியாபாரிகளுக்கு குறிப்பிட்டு சதவீத இடங்களை ஒதுக்கி வழங்க வேண்டும் : ஜவாஹிருல்லா கோரிக்கை
மனிதநேய தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த வியாபாரிகளுக்கு குறிப்பிட்டு சதவீத இடங்களை ஒதுக்கி வழங்க வேண்டும் : ஜவாஹிருல்லா கோரிக்கை
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா திருச்சியில் மேற்கு மாவட்ட தலைமை அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியர்களுக்கு அளித்த பேட்டியில், திருச்சியில் மாநகர சட்ட ஒழுங்கு பிரிவு தொடர்பான உளவுத்துறை நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் பணியிடம் இதுவரை நிரப்பப்படவில்லை இதேபோல் திருச்சியில் உள்ள மாரிஸ் மேம்பாலம், ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம், எடமலைப்பட்டி புதூர் பாலப்பணிகள் மற்றும் காவிரி பாலப்பணிகளை உடனடியாக முடித்து மக்களின் போக்குவரத்து சிரமங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல் திருச்சி பஜார் பகுதியில் மனிதநேய தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த வியாபாரிகளுக்கு குறிப்பிட்டு சதவீத இடங்களை ஒதுக்கி வழங்க வேண்டும் தெரிவித்தார்.
மேலும், டெல்லியில் ஒரு பெரிய நெருக்கடி நிலையை மோடி அரசு ஏற்படுத்தியிருக்கிறது. கரப்பான் பூச்சியின் அமைப்பின் தலைவர் விமானத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மோடி அரசு இதுவரை ஒரு தேர்தல் கூட சந்திக்காத கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி பார்த்து அஞ்சி நடுங்குகிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இது அமைந்துள்ளது. டெல்லியில் பல்வேறு பகுதிகள் பேரி கார்டு வைத்து அடைக்கப்பட்டு சர்வாதிகார ஆட்சி தலைநகரில் இருக்கின்றது என்பதற்கு எடுத்துக்காட்டாக இவை எல்லாம் நடைபெற்று வருகிறது. இதற்குக் காரணம் மோடியும் அமித்ஷாவும் தான். அவர்களது ஏவலாலாக இன்று பணியாற்றிக் கொண்டிருக்கிற அரசமைப்புச் சட்டத்தால் அதிகாரம் வழங்க இருப்பதை மறந்து ஆளுங்கட்சியின் ஏவாளராக மாறி உள்ளார் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார். சிறப்பு வாக்காளர் திருத்தப்பட்டியலில் ஏறத்தாழ 13.30 கோடி வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது ஒரு ஜனநாயக நாட்டில் உரிமை வாக்குரிமை. இதற்காகத்தான் காந்தியடிகள் போன்ற போராடினர். இந்த எஸ் ஐ ஆர் ஐ கொண்டு வந்து இந்த அராஜகம் செய்திருக்கின்றனர். இடதுசாரி தலைவர்கள், முன்னாள் முதல்வர்கள் உட்பட பல்வேறு தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உடனடியாக ஞானேஷ்குமார் பதிவு நீக்கம் செய்யப்பட வேண்டும். அவர் காலத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் எல்லாம் திரும்ப பெறப்பட்டு வாக்காளர்களை சேர்க்கலாம் என்று ஒரே ஒரு நாள் மட்டும் நடந்தியுள்ளார்கள். சிறப்பு வாக்காளர் முகம் நடத்தப்பட வேண்டும். நமக்கு பருவமழை பொய்து விட்டு காவிரியில் போதுமான அளவு தண்ணீர் வராத சூழலில் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாதம் 15 ஆம் தேதி மேட்டூர் தண்ணியை நிறுத்தி விடுவோம் என்று அரசு அறிவித்துள்ளது. எந்த அடிப்படையில் இந்த அறிவிப்பு சொன்னார்கள் என்று தெரியவில்லை இது விவசாயிகளுக்கு ஏற்ற அறிவிப்பில்லை எனவே உடனடியாக தமிழ்நாடு அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். தொடர்ச்சியாக தண்ணீர் திறக்க வேண்டிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தவெக ஆட்சி குறித்த கேள்விக்கு, மக்கள் நல ஆட்சியாக இருந்தால் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். கடந்த காலங்களில் திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை முதலமைச்சராக பதவி ஏற்றவுடன் முதல் கையெழுத்தாக நிறைவேற்றி உள்ளனர். ஆனால் தவெக கட்சி அளித்த வாக்குறுதிகளில் ஆறு சமையல் உருளைகள் வழங்குவதாக சொன்னார்கள். தற்பொழுது மூன்று தான் சொல்லப்பட்டுள்ளது அதுவும் எப்பொழுது வரும் என்று தெரியவில்லை மகளிர் உருவத்தை உயர்த்தி தரப்படவில்லை அது வருவதே பெரும்பாடாக உள்ளது. இவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தெரிவித்த வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்ற வேண்டும். வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை என்றால் எப்படி இரண்டு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றனர் என்ற கேள்விக்கு, இடைக்கால தேர்தல் வரலாற்றில் பார்க்கும் பொழுது மிகவும் அரிதாகவே எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளனர். ஆளுங்கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறுவார்கள். இரு இடங்களில் வெற்றி பெறுவதற்கு பொது தேர்தலில் விஜய் சில இடங்களில் தான் சென்றார் ஆனால் தற்போது தேர்தல் பரப்புரை மேற்கொண்டார் முருங்கைக்காய் பறித்தார் மாட்டுவண்டி ஓட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது டிராக்டர் ஓட்டக்கூடிய ஒரு வேலையின் கூட அவர் பார்த்து இந்த வெற்றியை பெற்றிருக்கிறார். ஆனால், திராவிட முன்னேற்றக் கழகம் இம்முறை இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. இன்றைக்கும் கூட இந்த ஆட்சியை விமர்சிப்பதற்கு கேள்வி கேட்பதற்கு தமிழகத்தில் முதன்மையாக ஒரு கட்சியை திமுக தான் தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகிறது. மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என இன்று விஜய் பேசி இருக்கிறார் என்ற கேள்விக்கு, தமிழ்நாட்டுக்கு தேவையான தமிழ்நாட்டுக்கு நிச்சயமாக தரவேண்டிய நிதிகளை ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு தர வேண்டும். கடந்த காலங்களில் வஞ்சனை செய்துள்ளது. இந்தத் தொழில் பேசி இருப்பார் என்று கருதுகிறேன். மற்ற மாநிலங்களை விட நாம்தான் அதிகமாக நிதியில் பங்களிப்பை செலுத்துகிறோம். மத்திய தொகுப்பிலிருந்து நமக்கு வரக்கூடிய நிதி குறைந்து கொண்டே போகிறது. நீட் இல்லாமலேயே தமிழக மருத்துவத்தில் முன்னிலையில் உள்ளது. நீட் வேண்டாம் என்று தமிழகம் சொல்கிறது ஆனால் நீட்டை திணிக்க கூடிய போக்கை ஒன்றிய அரசு கடைபிடிக்கிறது. திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைப்பது என்பதை எங்களிடம் சொன்னதாக காதர் மைதின் சொன்னார் என்ற கேள்விக்கு, அது அவரது அதீத கற்பனை இப்பொழுது அவர் சேர்ந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். தற்போது இரண்டு இடங்களில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றுள்ளது இன்னும் ஐந்து தேர்தல் நடைபெற உள்ளது அதன் ரிசல்ட்டை பார்ப்போம் அந்த ஐந்து இடம் வந்தால் அவர்களை கழட்டி விட்டு விடுவார்கள் எனவே இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என இப்படி பேசுகிறார். ஒரு போதும் திமுக பாசிச பாஜக உடன் கூட்டணி வைக்காது. இன்று சி ஐ ஏ, வக்பு சட்டம் பாஜகவின் ஒவ்வொரு கொள்கைகளையும் எதிர்த்து வீதிக்கு வந்து போராடக் கூடியவர் சட்டமன்றத்தில் தீர்மானத்தை கொண்டு வந்தவர் மு.க.ஸ்டாலின் தான். இப்பொழுது காதர்மொய்தீன் விமர்சிப்பது நியாயமாக பார்க்கவில்லை. எங்களின் நிலைப்பாடு தெளிவானது நேற்று ஒன்று இன்று ஒன்று என்றல்ல மறுநிமிடமே மாறக் கூடியவர்கள் அல்ல நாங்கள். மதசார்பற்ற கட்சியாக செயல்படும் தவெகவிற்கு எதிர்காலத்தில் ஆதரவு கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு, ஜோசியம் சொல்ல முடியாது. லஞ்சம் குறைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் பெருமையாக பேசி வருகிறார்கள் என்ற கேள்விக்கும ரிஜிஸ்டர் ஆபீஸ் போக பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று பாருங்கள் எந்த மாதிரி வேஷத்தில் லஞ்சம் நடைபெறும் என்பதை பத்திரிகையாளர்கள் நீங்கள் பார்க்கலாம். ஆளுங்கட்சிக்கு அரிது பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால் ஜனாதிபதி ஆட்சி வரக்கூடாது என்பதற்காக அவர்கள் அங்கு சென்று சேர்ந்தார்கள். அதை குறை சொல்ல முடியாது. அதன் காரணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தை வரம்பு மீறி விமர்சிப்பது என்பது நியாயமானது இல்லை. சிறைவாசி விடுதலைக்காக தொடர்ந்து நாங்கள் போராடி உள்ளோம் சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் பேசும் பொழுது ஜவாஹிருல்லா இந்த கோரிக்கை வைத்துள்ளார் கைதிகள் விடுதலை செய்வதற்காக நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லி ஏறத்தாழ 41 நீண்ட கால சிறைவாசிகள் விடுதலை செய்தது திராவிட முன்னேற்றக் கழக அரசு என தெரிவித்தார். பேடியின் போது நிர்வாகிகள் சபியுல்லாகான், முகமதுரஃபீக், இப்ராஹிம், இம்ரான், நாசீர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0