தெரு நாய்கள், பறவைகளுக்கு உண்ண உணவும், குடிநீர் வழங்கும் சமூக செயற்பாட்டாளர்

Oct 14, 2026 - 13:50
Oct 14, 2026 - 13:51
தெரு நாய்கள், பறவைகளுக்கு  உண்ண உணவும், குடிநீர் வழங்கும் சமூக செயற்பாட்டாளர்

தெரு நாய்கள், பறவைகளுக்கு உண்ண உணவும், குடிநீர் வழங்கும் சமூக செயற்பாட்டாளர்

யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற உயரிய தத்துவத்தைத் தந்த தமிழ் மண், மனிதர்களை மட்டுமன்றி உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் தன் உறவாகவே கருதியது. நகர்மயமாக்கல் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில், நம்மைச் சுற்றி வாழும் தெருநாய்கள், பூனைகள் மற்றும் பறவைகள் போன்ற எளிய உயிரினங்கள் உணவிற்கும், ஒரு துளி குடிநீருக்கும் தவித்து வருகின்றன.

 இவ்வுயிர்களைப் பேணிக் காப்பது மனிதகுலத்தின் முதன்மையான அறமாகும். அவ்வகையில் திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் 1995 ஆண்டு முதல் தெரு நாய், பூனை மற்றும் பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு உண்ண உணவும் அருந்த நீரும் வழங்கி வருகிறார். அவரது பணிக்கு அவரது மனைவி வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் மகள் கீர்த்தனா உள்ளிட்டோர் உறுதுணையாக உள்ளனர். இச்செயலால் பசியால் விலங்குகள் வன்முறையாக மாறுவது தடுக்கப்பட்டு, மனித-விலங்கு மோதல்கள் குறைகின்றன. வளரும் குழந்தைகளுக்குச் சக உயிர்களை மதிக்கும் உன்னதப் பண்பைக் கற்றுத் தருகிறது. இந்திய அரசியலமைப்பும், சட்டங்களும் வாயில்லா ஜீவன்களைப் பாதுகாப்பதை வெறும் தர்மமாகப் பார்க்காமல், குடிமக்களின், அரசின் சட்டப்பூர்வ கடமையாகவே வரையறுத்துள்ளன.

தெருநாய் பெருக்கத்தை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விலங்குப் பிறப்புக் கட்டுப்பாடு திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது. விலங்குகளுக்குத் தடுப்பூசி போடுவதிலும், கோடைக்காலங்களில் பறவைகளுக்காகப் பொது இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைத்தும் செயலாற்றி வருகிறது. அரசின் சட்ட திட்டங்களும், சமூகத்தின் பங்களிப்பும் இணையும் போதே எளிய உயிர்களின் வாழ்வு உத்திரவாதப்படுத்தப்படும். அவ்வகையில் தெருநாய்களுக்கும், பறவைகளுக்கு நீர் வைக்கும் குடும்பத்தினரின் மனிதநேய பணி குறிப்பிடத்தக்கது.இது குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில், பருவ நிலை மாற்றத்தால் சராசரியாக 100 டிகிரி வெயில் கொளுத்துகிறது. சாலைகள் அனலாக கொதிப்பதால் வாகனங்களில் கூட செல்ல முடியவில்லை. அந்த அளவுக்கு கோடை வெப்பம் அதிகமாக உள்ளது. தெருவோர நாய்கள் மரத்தடி நிழல்களிலும் நிற்கவைக்கப்பட்டுள்ள வாகனங்கள் கீழும் ஏன் சாக்கடைகளிலும் கூட படுத்து சூட்டை தணித்து வருகின்றன. இதற்கு பறவைகள் கால்நடைகள் உண்ண உணவும் குடிக்க குடிநீரும் வைத்துள்ளோம். இதனால் தெருவோர ஆதரவற்ற நாய்கள் குளித்து குதூகளமடைகின்றன. பலர் வீட்டில் வளர்க்கும் பன்னாட்டு ரக நாய் இனங்களுக்கு குளிர்சாதன வசதிகள் கூட ஏற்படுத்தியுள்ளார்கள். ஆனால் தெரு நாய்கள் என்று கூறப்படக்கூடிய நாட்டு நாய்கள் மக்களுடன் மக்களாக வாழக்கூடிய நாய்களை பராமரிப்பது இல்லை. மக்களிடம் அன்பும் பாசத்தையும் வெளிகாட்டி வரக்கூடிய தெரு நாய்கள் அந்த தெருவிற்கு புதிதாக வரும் நபர்களை பார்த்து குறைப்பதும் எச்சரிக்கை செய்வதும் வாடிக்கையாக உள்ளது. தெருநாய்கள் ஒவ்வொரு நில எல்லைகளில் நிலைத்து வாழும் தன்மை கொண்டதாக உள்ளது. பலர் தெரு நாயினை கல்லால் அடிப்பதால் கண் பார்வை பறிபோவதும் கால்கள் உடைந்து முடங்கிப் போவதும் உண்டு. இதை பார்த்து வாழும் இடங்களிலேயே அதற்கு உணவும் குடிநீரும் வைத்துள்ளோம் ஏனென்றால் உணவிற்காகவே நடந்து செல்பவரிடம் நாய்கள் அத்துமீறுகிறது என்பது கள ஆய்வில் தெரியவருகிறது. மேலும் மாநகராட்சி தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு அறுவை சிகிச்சையும் வெறிநாய்க்கான தடுப்பு ஊசிகளும் போடுகிறார்கள் ஆனால் அதன் வாழ்வாதாரத்திற்கு உணவு இல்லாத நிலையில் வீட்டிற்குள் வந்து படுப்பதும் வழியில் செல்போரை துரத்துவதும் வாடிக்கையாக உள்ளது எனவே அந்த சிரமத்தில் இருந்து தவிர்ப்பதற்காகவே இந்த முயற்சியை மேற்கொண்டு உள்ளோம் என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0