உலக மனநல தின உறுதிமொழி நிகழ்ச்சி

Oct 14, 2026 - 13:59
Oct 14, 2026 - 14:00
உலக மனநல தின உறுதிமொழி நிகழ்ச்சி

உலக மனநல தின உறுதிமொழி நிகழ்ச்சி

மனநல மருத்துவர் கே. ராமகிருஷ்ணன் வழிகாட்டுதலில் உலக மனநல தின நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக காந்தி மார்க்கெட் சரக உதவி ஆணையர் சபாபதி பங்கேற்றார், காந்தி மார்க்கெட் காவல் நிலைய ஆய்வாளர் விஜய், பாலக்கரை காவல் நிலைய ஆய்வாளர் சிவசுப்பிரமணியன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திருநாவுக்கரசு, ரவி, பிரேம்குமார், இருதயராஜ் தலைமை காவலர் புகழேந்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். திருச்சி ஆத்மா மனநல மருத்துவமனை தலைமை மனநல மருத்துவர் கே. ராமகிருஷ்ணன் வழிகாட்டுதலில் ஆத்மா மனநல மருத்துவமனை சமூக மன நல ஆலோசகர் கரன் லூயிஸ் ஆத்மா மனநல மருத்துவமனை மனநல ஆலோசகர் அஸ்வினி,மக்கள் தொடர்பு துறை சகாயராஜ் பீர்முகமது புவனேஸ்வரன்,லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் சாசன தலைவர் பேராசிரியர் ஹேமலதா, சாசன செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் உலக மனநல தின உறுதிமொழி ஏற்றனர்.

உறுதிமொழியில், நான், மனநலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, மனநலமும் உடல்நலமும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை ஏற்றுக்கொள்கிறேன். மனநலப் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த உறுதியேற்கிறேன். மனநலப் பாதிப்புள்ளவர்களைப் பாகுபாடின்றி மதித்து, அன்புடனும் கருணையுடனும் நடத்துவேன். மனநலப் பிரச்சினைகள் குறித்த தவறான நம்பிக்கைகளையும் களங்கத்தையும் அகற்ற என்னால் இயன்ற பங்களிப்பைச் செய்வேன். மன அழுத்தம் மற்றும் மனநலப் பாதிப்புகளை எதிர்கொள்பவர்களுக்கு ஆதரவாக இருப்பேன். மனநலப் பிரச்சினைகளுக்கு முறையான மருத்துவ உதவியும் ஆலோசனையும் பெறுவதன் அவசியத்தை எடுத்துரைப்பேன் எனது மனநலத்தையும் பாதுகாத்து, பிறரின் மனநலத்திற்கும் மதிப்பளிப்பேன். ”மனநலம் காப்போம்! மனிதநேயம் வளர்ப்போம் மனநலமுள்ள சமுதாயத்தை உருவாக்குவோம்!” இதனை எனது உறுதிமொழியாக ஏற்றுக்கொண்டு, மனநலம் காக்க வாழ்நாள் முழுவதும் பாடுபடுவேன் என்று உறுதி மொழி ஏற்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0