பாலினச் சமத்துவம் மற்றும் சமூக நீதியை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி
பாலினச் சமத்துவம் மற்றும் சமூக நீதியை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் முதுகலை சமூகப்பணித் துறை முதலாம் ஆண்டு மாணவர்கள் சார்பில், கல்லூரியின் பாலின உணர்வூட்டல் மன்றம் மற்றும் சி.எஸ்.ஐ. குட் நியூஸ் தொழிற்பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து, “பாலினச் சமத்துவம் மற்றும் சமூக நீதி” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த வழக்கறிஞர் விவேக் வளவாளராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் சுமார் 70 முதல் 80 பேர் வரை பங்கேற்றனர். பாலின வேறுபாடின்றி ஒவ்வொருவரையும் மதித்தல், அனைவருக்கும் சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை வழங்குதல், சமூக நீதியை நிலைநாட்டுதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து அவர் எடுத்துரைத்தார். குறிப்பாக, திருநங்கைகளின் உரிமைகள், அவர்களுக்கான சட்டப் பாதுகாப்புகள் மற்றும் அவர்களுக்குச் சமமான மரியாதையும் நீதியும் வழங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து, முன்னதாக நடத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்ற சி.எஸ்.ஐ. குட் நியூஸ் தொழிற்பயிற்சி நிறுவன மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியை பிஷப் ஹீபர் கல்லூரியின் முதலாம் ஆண்டு முதுகலை சமூகப்பணித் துறை மாணவர்களான சாம் எபினீசர் ஜே., முரளிவர்மா டி., சிவனேஷ் ஏ. மற்றும் செல்வி. நேகா ஸ்ரீ எம்.ஜே. ஆகியோர் ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சிக்கான வழிகாட்டுதலை பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப்பணித் துறையின் உதவிப் பேராசிரியர் திருமதி வி. பியூலா நேசப்ரியா வழங்கினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0