நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்றால் கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து தவெக அரசுக்கு முடிவு கட்ட வேண்டும் : யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் தீர்மானம்
நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்றால் கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து தவெக அரசுக்கு முடிவு கட்ட வேண்டும் : யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் தீர்மானம்
யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்தின் 6வது மாநில செயற்குழு கூட்டம் தவ்ஹீத் ஜமாத் பள்ளிவாசலில் மாநில தலைவர் பீமநகர் ரபிக் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் அப்பாஸ், மாநிலத் துணைச் செயலாளர் ஷாஹின், மாவட்டத் தலைவர் நஜ்முதீன் மற்றும் மாநில நிர்வாகிகளான பக்ருதீன், அன்சர்தீன் மற்றும் சித்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் கூட்டத்தில், இனாம்குளத்தூரில் இஸ்லாமியர்கள் பயன்பெறும் வகையில் புதிய தாவா சென்டர் அமைக்க முடிவு செய்யப்பட்டது, இஸ்லாமிய மக்களிடம் ஆசைவார்த்தை கூறி பல கோடி ரூபாயை ஏமாற்றிய அப்துல் பாசித் புகாரியை காப்பாற்றும் நடவடிக்கையில் தவெக அரசு ஈடுபடாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிதியைப் பெற்றுத் தர வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அப்துல் பாசித் புகாரியின் முன்ஜாமின் ரத்து செய்யப்பட்ட நிலையில் அவரை காவல்துறை கைது செய்யாமல் இருப்பதற்கு காரணம் தவெக அரசா அல்லது பாஜக அரசா என்பதை காவல்துறை தெளிவுபடுத்த வேண்டும் என்றும், ரீல்ஸ் மோக ஆட்சியில் விலைவாசி உயர்வு அதிகரித்து காணப்படுவதாகவும் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் இஸ்லாமிய வாக்குகள் தவெகவுக்கு கிடைத்ததாக தெரிவித்து வருகின்றனர், ஆனால் அவர்களுக்கு உரிய மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றும், கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் முஸ்லிம்களுக்கு திமுக அரசு அரணாக இருந்து, பல்வேறு உதவிகளையும் செய்துவந்தது அதனால் முஸ்லிம்கள் திமுகவை விட்டு விலகவில்லை. அதனால்தான் இஸ்லாமிய தலைவர்கள் அனைவரும் திமுக பக்கம் தான் இருக்கிறார்கள், இங்கே யூனியன் முஸ்லிம் லீக் இதுநாள்வரை உயிருடன் இருந்ததே திமுகவால் தான், தற்போது அந்த கட்சி தவெகவுடன் இருந்தாலும் இஸ்லாமியர்கள் யாவரும் தவெகவுடன் இல்லை, இனிமேலும் திமுகவுடன்தான் இஸ்லாமியர்கள் இருப்பார்கள் என்றார். முதல்வர் விஜயின் ஆரம்ப கால பிரச்சாரத்தில் பாஜக மற்றும் மோடி அரசைப்பற்றி பேச நடுங்குவார், ஆனால் எழுதிக்கொடுத்த ஸ்கிரிப்டில் 30 நிமிடம் பேச்சில் 50 முறை திமுகவை பற்றி தான் இருக்கும், பாஜக மற்றும் மோடியை பற்றி பேசமாட்டார். அவருக்கும் அவருடன் இருக்கும் சகாக்களுக்கும் மோடி என்றால் அச்சம், சட்டசபையில் பாஜக மோடி என்று பேசினாலே அதனை அவை குறிப்பில் இருந்து நீக்கவேண்டும் என்று கூறிய கோழை முதல்வர் தான் நமக்கு கிடைத்திருக்கிறார் என்று சாடினார்.
எஸ் ஐ ஆர் விவகாரத்தில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது, ஆனால் எஸ் ஐ ஆர் பற்றியோ மோடி பற்றிய ஒரு வலுவான போராட்டத்தை ஜோசப் விஜய் அவர்கள் முன்னெடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் பீமநகர் ரஃபீக் அவர்கள், நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்றால் கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து இந்த ஆட்சிக்கு முடிவுரை எழுதுங்கள் என்று கோரிக்கை விடுத்தார். ஜோசப் விஜயின் ஐந்து மாத கால ஆட்சி என்பது, வருடத்திற்கு ஒரு படம் ரிலீஸ் ஆகும், சட்டமன்றத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டயலாக் அந்த டயலாக் மூலம் ரசிகர்களுக்கு திரைப்படத்தை பார்த்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளாரே தவிர, மக்களுக்கு நல்லாட்சி தரவில்லை, இந்த ஆட்சி ஒழிய வேண்டும் என்று தான் பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர் என்றார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0