திருச்சி ரயில் சந்திப்பில் பாலினச் சமத்துவம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

Oct 21, 2026 - 19:16
திருச்சி ரயில் சந்திப்பில் பாலினச் சமத்துவம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி ரயில் சந்திப்பில் பாலினச் சமத்துவம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் முதுகலை சமூகப்பணித் துறை முதலாம் ஆண்டு மாணவர்கள் சார்பில், ரயில்வே அதிகாரிகள் மற்றும் கல்லூரியின் பாலின உணர்வூட்டல் மன்றத்துடன் இணைந்து, திருச்சிராப்பள்ளி ரயில் சந்திப்பில் பாலினச் சமத்துவம், பெண்கள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த சேவை மையத்தின் பணியாளர் திருமதி ஜெனிபர் வளவாளராகக் கலந்து கொண்டு விழிப்புணர்வு உரையாற்றினார். பாலினச் சமத்துவம், பெண்களின் பாதுகாப்பு, சம உரிமைகள் மற்றும் பொது இடங்களில் அனைவரிடமும் மரியாதையுடன் நடந்துகொள்வதன் அவசியம் குறித்து அவர் எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் ரயில்வே பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ரயில் சந்திப்பின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. முதல் துண்டுப் பிரசுரத்தை உதவி மருத்துவ ஆணையர் திருமதி A. G. திவ்யா பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய இந்திய ரயில்வே போக்குவரத்துப் பணி (IRTS), மூத்த கோட்ட வணிக மேலாளர் (Sr. DCM) வெங்கடராகவன், மற்றும் துணை நிலைய மேலாளர் (DySMR) லெவின் காரன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும், ரயில்வே அதிகாரிகளின் ஆதரவுடன் RailOne செயலியின் பயன்பாடு குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை பிஷப் ஹீபர் கல்லூரியின் முதலாம் ஆண்டு முதுகலை சமூகப்பணித் துறை மாணவர்களான சிவனேஷ் ஏ., செல்வி. நேகா ஸ்ரீ எம்.ஜே., முரளிவர்மா டி. மற்றும் சாம் எபினீசர் ஜே. ஆகியோர் ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சிக்கான வழிகாட்டுதலை பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப்பணித் துறையின் உதவிப் பேராசிரியர் திருமதி வி. பியூலா நேசப்ரியா வழங்கினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0