திருச்சி கிழக்கு தொகுதியில் இரட்டை இலை மலரும் : பேரவை கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி. உதயகுமார் பேச்சு
திருச்சி கிழக்கு தொகுதியில் இரட்டை இலை மலரும் : பேரவை கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி. உதயகுமார் பேச்சு
திருச்சி மாவட்டம் மற்றும் மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜெயலலிதா பேரவை மாநில செயலாளர், முன்னாள் அமைச்சர்ருமான ஆர் பி உதயகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் ரத்னவேல், திருச்சி மாவட்ட செயலாளர்கள் கார்த்திகேயன், மனோகரன், யோகநாதன், டிஎன் சிவக்குமார், மகளிரணி இணைச் செயலாளர் லீமா ரோஸ் மார்டின் எம்எல்ஏ ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். முன்னதாக பேரவை மாவட்ட செயலாளர் அய்யம்பாளையம் ரமேஷ், பொன்னார் ஆகியோர் வரவேற்றனர்.
கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாநில செயலாளரும், முன்னாள் அமைச்சர்ருமான ஆர் பி உதயகுமார் பேசும் பொழுது, திருச்சி கிழக்கு தொகுதியில் இரட்டை இலை மலரும் அதிமுகவிற்கு வெற்றி ஒன்றும் புதிது அல்ல. தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோர் இணைந்து எடப்பாடியை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்று பேசினார்.
கூட்டத்தில் பேரவை மாநில துணை செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன், டி ஆர் சுரேஷ் குமார் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள், திருச்சி மாநகர், புறநகர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0