திருச்சி மாவட்டம் இனாம் பெரியநாயகி சத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு தேர்தல் : புதிய உறுப்பினர்கள் தேர்வு

Oct 25, 2026 - 15:39

திருச்சி மாவட்டம் இனாம் பெரியநாயகி சத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு தேர்தல் பள்ளியின் தலைமை ஆசிரியர் ந.அழகு சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளியின் முன்னாள் பள்ளி மேலாண்மை குழு தலைவி திருமதி மாதவி, பள்ளிக் கல்வித் துறையின் மூலம் பார்வையாளராக நியமிக்கப்பட்ட இனம் மாத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் முதுகலை ஆசிரியர் திருமதி சீதாலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மேலாண்மை குழு தேர்தலை நடத்தினர்.

இத்தேர்வில் தலைவராக திருமதி சித்ரா, துணைத் தலைவராக திருமதி சசிகலா, பெற்றோர்களின் உறுப்பினர்களாக 12 பெற்றோர்களும் சுய உதவி குழு, வார்டு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்களின் பெற்றோர்கள் முன்னாள் மாணவர்கள் ஆசிரியர் பிரதிநிதி உட்பட 24 நபர்களை தேர்ந்தெடுத்து பள்ளி மேலாண்மை குழு தேர்தலை முடித்து வைக்கப்பட்டனர்.

முதல் கூட்ட அமர்வில் முதல் தீர்மானமாக பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கி இருப்பதால் மண் அடித்து மாணவர்கள் பயன் பெரும் வகையில் பேவர் பிளாக் அமைத்து தருவது எனவும் பகுதியில் புறம்போக்கு உள்ள இடத்தை மாணவர்களுக்கு விளையாட்டு மைதானமாக ஆக்கித் தருவதும் பள்ளி கட்டிடத்திற்கு கலர் வண்ணம் அடித்திடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கூட்டம் இனிதே முடிந்தது. முடிவில் கணித பட்டதாரி ஆசிரியர் திருமதி நந்தினி நன்றி கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0