தென் கொரியாவில் நடைபெற்ற விழாவில் ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுபா பிரபுவுக்கு இன்டர்நேஷனல் விருது

Nov 11, 2026 - 21:33

தென்கொரியாவின் ஓசோங்கில், கொரிய தமிழ் சங்கம், ஆலந்தூர் கோ. மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையம், விஜிபி உலக தமிழ் சங்கம் இணைந்து நடத்திய முப்பெரும் விழாவில், உலகின் 205-வது திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடந்தது. விஜிபி உலக தமிழ் சங்கத்தலைவர் தொழிலதிபர் வி.ஜி. சந்தோசம் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த சாதனையாளர்களுக்கு சர்வதேச விருது வழங்கப்பட்டது. அந்த வகையில் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக அதிகாரி மற்றும் ரோட்டரி துணை ஆளுநர் சுபா பிரபுவுக்கு கொரிய தமிழ் சங்க விருது 2026 வழங்கப்பட்டது.

 இந்நிகழ்வில் பல நாடுகளிலிருந்து 50-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் உட்பட சுமார் 200 பேர் பங்கேற்றனர். தமிழ்கொரிய மொழி, பண்பாடு, வரலாற்று உறவுகள் குறித்த ஆய்வுகள், நூல் வெளியீடுகள், விருது வழங்கல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் விழாவை சிறப்பித்தன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0