திருச்சி மாவட்டம் இனாம் பெரிய நாயகி சத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பாரத சாரண சாரணியர் இயக்கம் தொடக்கம்

Nov 13, 2026 - 13:11
Nov 13, 2026 - 13:15
திருச்சி மாவட்டம் இனாம் பெரிய நாயகி சத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பாரத சாரண சாரணியர் இயக்கம் தொடக்கம்

திருச்சி மாவட்டம் இனாம் பெரிய நாயகி சத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பாரத சாரண சாரணியர் இயக்கம் தொடக்கம்

திருச்சி மாவட்டம் இனாம் பெரிய நாயகி சத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பாரத சாரண சாரணியர் இயக்கம் புதியதாக தொடங்கப்பட்டது. விழாவினை ந அழகு சுப்ரமணியன் தலைமையேற்று நடத்தினர். இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக மணப்பாறை கல்வி மாவட்ட செயலாளர் சாரணர் பிரிவு சார்லஸ் மைக்கேல்ராஜ், ஓந்தாம் பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆங்கில பட்டதாரி ஆசிரியர், திருமதி எம் மகேஸ்வரி மாவட்ட அமைப்பு ஆணையர் சாரணியர் பிரிவு அரசு உயர்நிலைப்பள்ளி சமுத்திரம், திருமதி பூரணி சத்தியவர்த்தனன் FIRM HANDS OPEN SCOUT GROUP திருச்சி, ஆகியோர் கலந்து கொண்டு பாரத சாரண சாரணியர் இயக்கத்தை பற்றிய வரலாறும் பள்ளியில் சாரண சாரணியர் அமைப்பு எவ்வாறு செயல்பட வேண்டும் எனவும் பாரத சாரண சாரணியர் இயக்கத்தில் நாம் என்னவாக இருக்க வேண்டும் என்று பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வரலாறுகளைப் பற்றி எடுத்துரைத்து பள்ளியில் பாரத சாரண சாரணியர் இயக்கத்தை தொடக்கி வைத்தனர்.

 இவ்விழாவிற்கு வருகை தந்துள்ள அனைத்து சிறப்பு விருந்தினர்களையும் இப்பள்ளியின் சாரண பிரிவு ஆசிரியர் திருமதி இமா குலேட் ஷாலினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் வரவேற்புரை நல்கினார். இப்பள்ளியில் முதல் கட்டமாக 50 மாணவ மாணவியர்கள் சாரண சாரணியர் இயக்கத்தில் சேர்ந்துள்ளனர்

 இறுதியாக இப்பள்ளியின் சாரணியர் பிரிவு ஆசிரியர் திருமதி ஜோன் ஆப் ஆர்க் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் நன்றியுரை கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0