மூத்த வீரர்கள் மீது கால் புணர்ச்சி காரணமாக குற்றச்சாட்டு : முன்னாள் சர்வதேச தடகள வீரர் அண்ணாவி விளக்கம்

Aug 28, 2026 - 19:56
Aug 28, 2026 - 19:57
மூத்த வீரர்கள் மீது கால் புணர்ச்சி காரணமாக  குற்றச்சாட்டு : முன்னாள் சர்வதேச தடகள வீரர் அண்ணாவி விளக்கம்

மூத்த வீரர்கள் மீது கால் புணர்ச்சி காரணமாக குற்றச்சாட்டு : முன்னாள் சர்வதேச தடகள வீரர் அண்ணாவி விளக்கம்

திருச்சி மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசுகந்தியின் கணவர் அண்ணாவி, அண்ணா விளையாட்டு அரங்கத்தை தனது சொந்த மைதானம் போல் பயன்படுத்துகிறார் என்பது உள்ளிட்ட புகார்களை சிலர் கலெக்டரிடம் அளித்துள்ளனர். இதுகுறித்து முன்னாள் சர்வதேச தடகள வீரரும், ரயில் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் மாஸ்டர்ஸ் அத்லெட்டிக் அசோசியேசன் நிர்வாகியுமான அண்ணாவி கூறும்போது, ஒரு விளையாட்டு துறை அலுவலர் தனது பொறுப்பில் உள்ள மைதானத்தை தூய்மையாகவும், வசதியாகவும் செய்து தரவேண்டியது கடமை. சொந்த மைதானம் போல் பாவித்தால் தான் அதை செய்ய முடியும். நான் ஒரு ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். அரசு கட்டுப்பாட்டில் உள்ள விளையாட்டு மைதானங்களை பயன்படுத்த ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். மைதானம் காலியாக இருந்தால் மட்டுமே அவர்களுக்கு வாடகைக்கு விடப்படும். இது கூட தெரியாதவர்கள் கண்மூடித்தனமாக புகார் அளித்துள்ளனர். என்னிடம் சுமார் 70 குழந்தைகள் பயிற்சி பெறுகின்றனர். பயிற் காணசிக்கு வர விரும்பும் மாணவ, மாணவிகள் கட்டாயம் அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.118 செலுத்தி அதற்குண்டான ரசீதை கொடுத்தால் மட்டுமே பயிற்சி அளிக்கிறேன். என்னோடு சேர்ந்து இருவர் பயிற்சி அளிக்கின்றனர்.

என்னிடம் பயிற்சி பெற வருகிறவர்கள் கட்டாயம் என் அகாடமியில் இணைத்து கொண்டு மாதம் ரூ.500 செலுத்த வேண்டும் என்பது அகாடமி விதி. இந்த தொகை விளையாட்டு போட்டிகள் நடத்தவும், சீருடைகள் வாங்கவும் பயன்படுத்துகிறோம். மற்ற பயிற்சியாளர்களுக்கு அத்தொகையில் இருந்து மதிப்பூதியம் வழங்குகிறோம். விளையாட்டு வீரர்களின் நலனில் அக்கறையுடன் செயல்படும் மூத்த வீரர்கள் மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறுவோர் மீதும் அவர்கள் பின்னணி குறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றார். மேலும் நான் கிட்டத்தட்ட 20 ஆண்டுக்கு மேலாக இந்திய அணியின் உடைய பயிற்சியாளராக இருந்த அனுபவம் உண்டு. கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியன் ரயில்வேயில் பயிற்சியாளராக இருந்த அனுபவம் எனக்கு உண்டு, அது மட்டுமல்லாமல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உடைய சிறப்பு பயிற்சியாளராக கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் பணிபுரிந்து இருக்கிறேன். இந்த நிலையில் தேவையில்லாத கால் புணர்ச்சிகள் காரணத்தால் என் மீது புகார் கொடுத்துள்ளார்கள் என்றும் கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0