தமிழகத்தில் முதன்முறையாக மறுவாழ்வு முகாம் தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டைகள் வழங்கி CFTUI அசத்தல்

Sep 14, 2026 - 14:03
Sep 14, 2026 - 14:04
தமிழகத்தில் முதன்முறையாக மறுவாழ்வு முகாம் தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டைகள் வழங்கி CFTUI அசத்தல்

தமிழகத்தில் முதன்முறையாக மறுவாழ்வு முகாம் தொழிலாளர்களுக்கு நலவாரிய அட்டைகள் வழங்கி CFTUI அசத்தல்

சுதந்திர இந்திய தொழிற்சங்கங்களின் தேசிய கூட்டமைப்பு (CFTUI) மற்றும் தொழிற்சங்க பாதுகாப்பு கூட்டமைப்பு (TUPF) இணைந்து, ‘பரணி தீபம் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலச்சங்கம்' வாயிலாக நடத்திய சிறப்பு முகாமின் மூலம் 15 தொழிலாளர்களுக்குத் தொழிலாளர் நலவாரிய அடையாள அட்டைகள் வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளன.

 கடந்த வாரம் தென்பள்ளிப்பட்டு மறுவாழ்வு முகாமில் தொழிலாளர் நலவாரியப் பதிவு முகாம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகத் தமிழகத்திலேயே முதன்முறையாக CFTUI தொழிற்சங்கத்தின் முன்னெடுப்பில் முகாம் தொழிலாளர்களுக்கு இந்த நலவாரிய அட்டைகள் பெற்றுத் தரப்பட்டுள்ளன. அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களும் நலத்திட்ட உதவிகளும் விளிம்புநிலை கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களை முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு உறுதுணையாக இருந்த தொழிலாளர் நலத்துறை மற்றும் மறுவாழ்வு துறையின் உயர் அதிகாரிகள், மாவட்டத் தொழிலாளர் துறை அதிகாரிகள், மாவட்ட முகாம் தனி வட்டாட்சியர் மற்றும் தமிழ்நாடு யூனிசர் நிறுவன தலைமை இயக்குனர் வலன் ஆகியோருக்கு CFTUI தமிழ்நாடு மாநிலத் தலைவர் K. சரவணன் தொழிலாளர்கள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். "சமூகப் பாதுகாப்பு என்பது ஒவ்வொரு தொழிலாளரின் உரிமை; மக்களின் நலனே முதன்மை - தொழிலாளர்களின் உரிமையே எங்கள் நோக்கம்” என மாநிலத் தலைவர் K. சரவணன் இத்தருணத்தில் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0