திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 6 பேர் கைது

Nov 2, 2025 - 18:21
திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 6 பேர் கைது

திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 6 பேர் கைது

திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ்சரகத்துக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த அருள் முருகன் (வயது 42), பொன்மலை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட முன்னாள் ராணுவ காலனி பகுதியில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த ராஜா (வயது 53), திருவரங்கத்தில் கீழவாசல் பகுதியில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த ஷகிலா பேகம் (வயது 52) காந்தி மார்க்கெட் பகுதியில் தஞ்சை ரோடு பகுதியில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த வெங்கடாசலம் (வயது 43), பாலக்கரை பகுதி கெம்ஸ் டவுன் பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த சதீஷ்குமார் (வயது 42), உறையூர் பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த முத்து கண்ணன் (வயது 24 ) ஆகிய 6பேரை போலீசார் கைது செய்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். பிறகு அனைவரையும் ஜாமினில் விடுதலை செய்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0