திருச்சி திருவெறும்பூர் பகுதியில் கனமழையால் 450 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகள் பாதிப்பு : கலெக்டரிடம் த. மா கா. விவசாய அணி கோரிக்கை மனு

Nov 3, 2025 - 15:41

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாவட்ட விவசாய அணி தலைவர் புங்கனூர் எஸ் செல்வம் கலெக்டர் சரவணன் இடம் புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது நடப்பு சம்பா சாகுபடி காலத்தே விதைத்து நடவு செய்து தூர் கட்டும் பருவத்தில் கனமழை பெய்தது. வடிகால் வசதியை நீர்வள துறை பராமரிக்கப்படாமல் விட்டதால் வடிகால் வசதியின்றி பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டது வேங்கூரில் 150 ஏக்கர் நெற் பயிர்கள் மூழ்கின அதே போன்று பத்தால கோட்டை, பனங்குடி திரு நெடுங்குளம் போன்ற 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் 300 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி முழுமையாக பாதிப்படைந்துள்ளது. விதை உளவு நடவு பணி உரம் முதற்கொண்டு ஒரு ஏக்கருக்கு ஒரு ரூபாய் 25 ஆயிரத்துக்கு மேல் செலவு செய்து விவசாயிகள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். மேற்படி பாதிக்கப்பட்ட பயிர்களை வருவாய்த்துறை வேளாண் துறை மூலம் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர். மனு அளித்த போது மண்டல பொறுப்பாளர் வயலூர் ராஜேந்திரன் உடன் இருந்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 1
Sad Sad 0
Wow Wow 0