விஜயாலய சோழீஸ்வரம் கோவில் குறித்து அறிய மரபு நடை பயணம்

Nov 3, 2025 - 19:42
விஜயாலய சோழீஸ்வரம் கோவில்  குறித்து அறிய மரபு நடை பயணம்

விஜயாலய சோழீஸ்வரம் கோவில் குறித்து அறிய மரபு நடை பயணம்

திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர்கள் குழு சார்பில் நார்த்தாமலை மேல்மலை விஜயாலய சோழீஸ்வரம் கோவில் குறித்து அறிய மரபு நடை பயணத்தை திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர்கள் குழு தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர்கள் பாண்டியன், முகமது சுபேர், சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன், வரலாற்று ஆசிரியர் அரிஸ்டோ வசந்தகுமார் உள்ளிட்டோர் பயணம் மேற்கொண்டனர். திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர்கள் குழுவினர் நார்த்தாமலை மேல்மலை விஜயாலய சோழீஸ்வரம் கோவில் குறித்து பேசுகையில், திருச்சிராப்பள்ளி - புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் திருச்சிராப்பள்ளியிலிருந்து 36 கிலோமீட்டர் தொலைவிலும் புதுக்கோட்டையிலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது இந்த நார்த்தாமலை. பல சிறிய மலைகளும், சிலைகள் நிறைந்த குகைகள் மற்றும் கற்றளிகளும் இப்பகுதியில் அதிகம் காணப்படுகின்றன. பல மூலிகை செடிகளும் உள்ளன.தொண்டைமான் மூலிகை காடு என்ற மூலிகைப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் இருந்து நேரடியாகப் பேருந்து வசதியும் உள்ளது. திருச்சிராப்பள்ளியிலிருந்து பேருந்து மூலம் வருபவர்கள் பொம்மாடிமலையில் இறங்கி நார்த்தாமலைக்கு வரலாம். கீரனுரில் இருந்து அடிக்கடி பேருந்து வசதியும் உள்ளது. விசயாலய சோழீசுவரம் என்பது தமிழ்நாட்டின், புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை கிராமத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் மலைமீது அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இக்கோயில் பல்லவர் மற்றும் சோழர் கலைப்பாணியினைக் கொண்டதாகக் கூறப்படுகிறது என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0