திருச்சி அமிர்த வித்யாலயம் பள்ளியில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

Dec 6, 2025 - 14:49
திருச்சி அமிர்த வித்யாலயம் பள்ளியில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

திருச்சி அமிர்த வித்யாலயம் பள்ளியில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

திருச்சி ரெட்டைவாய்க்கால் அமிர்த வித்யாலயம் சிபிஎஸ்சி பள்ளியில் இரண்டாவது நாளாக மாவட்ட அளவிலான சதுரங்கம் மற்றும் டேபிள் டென்னிஸ் மற்றும் இசை குழுவினரின் (பேண்ட்) போட்டிகள் நடைபெற்றன.

இதில் திருச்சி மாவட்டத்தில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும் 20-க்கும் மேற்பட்ட பேண்ட் (இசைக் குழுவினர்) அணியினரும் வருகை தந்தனர். வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் 150க்கு மேற்பட்ட பரிசுகளையும், பதக்கங்களையும், சான்றிதழ்களையும், பள்ளி முதல்வர் அவர்களும் தலைமை ஆசிரியர் அவர்களும் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு வழங்கினார்கள்.

இதில் பேண்ட் (இசைக்குழுவினர்) அணியினர் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0