ராஜேந்திர சோழனின் கடற்படைப் பயணத்தின் ஆயிரமாவது ஆண்டு நிறைவை நினைவு கூறும் நாணயம் குறித்த சிறப்பு சொற்பொழிவு

Dec 8, 2025 - 13:48
Dec 8, 2025 - 13:49
ராஜேந்திர சோழனின் கடற்படைப் பயணத்தின் ஆயிரமாவது ஆண்டு நிறைவை நினைவு கூறும் நாணயம் குறித்த சிறப்பு சொற்பொழிவு

ராஜேந்திர சோழனின் கடற்படைப் பயணத்தின் ஆயிரமாவது ஆண்டு நிறைவை நினைவு கூறும் நாணயம் குறித்த சிறப்பு சொற்பொழிவு

திருச்சி ஜமால் முகமது கல்லூரி பவள விழா கண்காட்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.கல்லூரி முதல்வர் முனைவர் ஜார்ஜ் அமலரெத்தினம் தலைமை வகித்தார்.செயலர் மற்றும் தாளாளர் ஹாஜி டாக்டர் ஏ. கே. காஜா நஜிமுத்தீன், பொருளாளர் ஹாஜி எம்.ஜே. ஜமால் முகமது சாகிப், துணைச் செயலர் முனைவர் கே அப்துஸ் சமது உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதுகலை மற்றும் தமிழாய்வுத் துறையின் சார்பாக தமிழர் பாரம்பரிய புழங்கு பொருட்கள், பழங்கால மற்றும் சமகால நாணயங்கள் மற்றும் உலகப் பணத்தாள்கள், ஐந்திணைக் காட்சிகள், தமிழர் பாரம்பரிய உணவு தானியங்கள், வளரிள தாவரங்களின் மதிப்புக்கூட்டு தயாரிப்புகள் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டன.

ராஜேந்திர நினைவாற்ற நாணயம் குறித்து இளம் வழுதி பேசுகையில்,ராஜேந்திர சோழன் நாணயம் என்பது, சோழப் பேரரசர் முதலாம் ராஜேந்திர சோழனால் வெளியிடப்பட்ட வரலாற்று நாணயங்கள் மற்றும் அவரது நினைவாக 2025 ஆண்டு இந்திய அரசால் வெளியிடப்பட்ட ₹1000 மதிப்புள்ள புழக்கத்தில் விடப்படாத நினைவார்த்த நாணயத்தில் சோழர் சின்னங்கள் புலி, மீன், குடை உள்ளது.99.9% தூய வெள்ளி உலோகத்தால் செய்யப்பட்டு, ராஜேந்திர சோழனின் கடற்படைப் பயணத்தின் 1000-ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிட்டது என்றார். கல்லூரி நிருவாகக் குழு பொருளாளர் ஹாஜி எம்.ஜே. ஜமால் முகமது, துணை முதல்வர் முனைவர் ஜாகீர் உசேன், தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஷே.நாகூர்கனி, தேர்வு நெறியாளர் முனைவர் அ.சையத் ஜாகீர் ஹசன், தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் முனைவர் க. சிராஜுதீன், பேரா. கா. முகமது இஸ்மாயில், முனைவர் ச. அ. சையத் அகமது பிரோசு, முனைவர் அ. மா. முகமது ஹாரிஸ்,முனைவர் மு.ஜஹானாரா, முனைவர் சு.விஜயலட்சுமி பேரா ரா. ரஜுலா,பேரா ச. செல்வி உள்ளிட்ட பேராசிரியர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வரலாற்று ஆர்வலர் குழு நிறுவனத் தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார் சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர்கள் பாண்டியன் முகமது ஜுபைர் சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் பிரிட்டிஷ் இந்திய நாணயங்கள் சேகரிப்பாளர் லட்சுமி நாராயணன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0