மனைவி பிரிந்து சென்றதால் கேன்டீன் ஊழியர் தற்கொலை : உறையூர் போலீசார் விசாரணை

Dec 16, 2025 - 17:55
மனைவி பிரிந்து சென்றதால் கேன்டீன்  ஊழியர் தற்கொலை : உறையூர் போலீசார் விசாரணை

மனைவி பிரிந்து சென்றதால் கேன்டீன் ஊழியர் தற்கொலை : உறையூர் போலீசார் விசாரணை

திருச்சி உறையூர் நாடார் தெருவை சேர்ந்தவர் ஜெகன் (வயது 25) இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஆண் குழந்தை உள்ளது.

இவர் பெங்களூரில் தனியார் கேண்டினில் ஊழியராக வேலை செய்து வந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக இவரது மனைவி தனியாக பிரிந்து சென்று விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த இவர் சம்பவத்தன்று எலி மருந்து சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதை கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0