திருச்சியில் மொழிப்போர் தியாகிகளுக்கு அதிமுகவினர் வீர வணக்க அஞ்சலி : மாவட்ட செயலாளர்கள் பரஞ்ஜோதி, குமார், சீனிவாசன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு

Jan 25, 2026 - 17:27
Jan 25, 2026 - 19:16
திருச்சியில்  மொழிப்போர் தியாகிகளுக்கு அதிமுகவினர் வீர வணக்க அஞ்சலி :  மாவட்ட செயலாளர்கள் பரஞ்ஜோதி, குமார், சீனிவாசன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு

திருச்சியில் மொழிப்போர் தியாகிகளுக்கு அதிமுகவினர் வீர வணக்க அஞ்சலி : மாவட்ட செயலாளர்கள் பரஞ்ஜோதி, குமார், சீனிவாசன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு

திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அதிமுக சார்பில் ( மாநகர், தெற்கு, வடக்கு) மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் அமைதி ஊர்வலம் திருச்சியில் நடந்தது. இந்த ஊர்வலம் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலையில் இருந்து தென்னூர் உழவர் சந்தை அருகில் உள்ள தியாகிகள் நினைவிடத்தை சென்றடைந்தது. இந்த ஊர்வல நிகழ்ச்சிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் மு. பரஞ்ஜோதி, ப குமார், ஜெ. சீனிவாசன் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னதாக மாவட்ட மாணவர் அணி செயலாளர்கள் அறிவழகன், அழகர்சாமி ஆகியோர் வரவேற்றனர்.

 நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர்கள் டி.ரத்தினவேல் , ஆர்.மனோகரன், எஸ்.வளர்மதி, மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் புல்லட் ஜான், பேரவை மாநில இணைச் செயலாளர் ஜெயம் ஸ்ரீதர், ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர்கள் கவுன்சிலர் அரவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் பொருளாளர் ராஜசேகரன், திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர் கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி, ஜாக்குலீன், ஐ.டி. பிரிவு மண்டல இணைச் செயலாளர் கிருசாந்த், மாவட்ட அணி நிர்வாகிகள் இளைஞரணி ரஜினிகாந்த், ஐ.டி. வெங்கட் பிரபு, முன்னாள் மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன், முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் மகளிர் அணி செயலாளருமான டாக்டர் தமிழரசி சுப்பையா, பகுதி செயலாளர்கள் என்.எஸ் பூபதி, புத்தூர் ராஜேந்திரன், அன்பழகன், நாகநாதர் பாண்டி , ஏர்போர்ட் விஜி, ரோஜர், வாசுதேவன், எம்.ஆர்.ஆர். முஸ்தபா, கலீல் ரகுமான், கலைவாணன், இளைஞர் அணி சில்வர் சதீஷ்குமார், ஜெயலலிதா பேரவை பொன்னர், வழக்கறிஞர் தினேஷ் பாபு, கருமண்டபம் சுரேந்தர், சிறுபான்மை பிரிவு தென்னூர் ஹாஜகான், நிர்வாகிகள் முல்லை சுரேஷ், முத்துமாரி, வரகனேரி சசிகுமார், வக்கீல்கள் கௌசல்யா, சேது மாதவன், ஜெயஸ்ரீ, இளைஞரணி டிஆர். சுரேஷ்குமார், நிர்வாகிகள் வெல்லமண்டி பெருமாள், டிபன் கடை கார்த்திகேயன், அப்பா குட்டி, வாழைக்காய் மண்டி சுரேஷ், பேராசிரியர் தமிழரசன், டி.வி.எஸ் .டோல்கேட் செல்லப்பா, தில்லை விஷ்வா, வசந்தம் செல்வமணி, புத்தூர் பாலு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0