இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியில் TECH INNOVZA ’26
இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியில் TECH INNOVZA ’26
இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி (தன்னாட்சி), மணிகண்டம், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பில், ஒரு நாள் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கான “TECH INNOVZA ’26” சிறப்பாக நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 1,000 மாணவர்கள் பங்கேற்றனர். துவக்க விழா, சிறப்பு விருந்தினர்களால் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கப்பட்டது. துறை பங்களிப்பு நிகழ்ச்சியாக பெயர் பலகை திறப்பு, நூல் வழங்கல் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு, கல்வி வளர்ச்சியும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் வலியுறுத்தப்பட்டது. இந்திரா கணேசன் நிறுவனங்களின் செயலாளர் எர். ஜி. ராஜசேகரன் பாராட்டு உரையாற்றி, நிகழ்ச்சியை சிற
ப்பாக ஏற்பாடு செய்த குழுவினரை பாராட்டியதுடன், மாணவர்கள் புதுமை, ஒழுக்கம் மற்றும் தொழில்துறைக்கு ஏற்ற திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
கல்லூரியின் முதல்வரும் இயக்குநருமான டாக்டர் ஜி. பாலகிருஷ்ணன் துவக்க உரையாற்றி, தொழில்நுட்ப சிறப்பு, ஆராய்ச்சி மனப்பான்மை மற்றும் மாணவர்களின் முழுமையான வளர்ச்சியின் அவசியத்தை வலியுறுத்தினார். தொழில்–கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், மெக்னிட்யூடோ டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடப்பட்டது. இந்நிகழ்வில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி எம். ரேவதி பங்கேற்றார். இந்த ஒப்பந்தம், டாக்டர். மு. அனுசுயா (பதிவு அலுவலர்), டாக்டர். எஸ். கார்த்திகேயன் (துணை முதல்வர்), மற்றும் டாக்டர். ஜே. ஜெனியர் (நெட் குவாண்டா – அசோசியேஷன் தலைவி) ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது. தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT), திருச்சிராப்பள்ளி, கணினி பயன்பாடுகள் துறையின் பேராசிரியர் டாக்டர் எஸ். நிக்கோலஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, உருவெடுத்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள் குறித்த தனது உரையின் மூலம் மாணவர்களை உற்சாகப்படுத்தினார். நிறைவு விழாவில் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0