திருச்சி கருமண்டபம் பகுதி செயலாளர் சுரேந்தர் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் : எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக தீர்மானம்
திருச்சி கருமண்டபம் பகுதி செயலாளர் சுரேந்தர் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் : எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக தீர்மானம்
திருச்சி மாநகர் மாவட்ட கருமண்டபம் பகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமையில் கருமண்டபம் பகுதி செயலாளர் சுரேந்தர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78வது பிறந்தநாள் விழாவை அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடுவது, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்களை நடத்துவது, எதிர்வரும் தேர்தலில் பொதுச் செயலாளர் எடப்பாடியாரை மீண்டும் தமிழக முதல்வராக்க அயராது கழக பணியாற்றுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அணி செயலாளர்கள் அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் ஞானசேகர், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஜோசப் ஜெரால்ட், இளைஞர் அணி செயலாளர் ரஜினிகாந்த், ஏர்போர்ட் வடக்கு பகுதி செயலாளர் வெங்கட் பிரபு, அம்மா பேரவை இணை செயலாளர் வக்கீல் தினேஷ் பாபு, டிபன் கடை கார்த்திக், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் மா.கோ.சிவக்குமார், வட்ட செயலாளர்கள் ஒத்தக்கடை மகேந்திரன், வெங்கடேஷ், கணேசன், பெருமாள், அமீர் பாஷா, அம்ஜித், மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0