7வது முறையும் நாம் தான் ; இனி எப்போதும் நாம் தான் : திமுக மாநில மாநாட்டில் மு.க .ஸ்டாலின் பேச்சு

Mar 10, 2026 - 16:38
7வது முறையும் நாம் தான் ; இனி எப்போதும் நாம் தான் : திமுக மாநில மாநாட்டில் மு.க .ஸ்டாலின் பேச்சு

7வது முறையும் நாம் தான் ; இனி எப்போதும் நாம் தான் : திமுக மாநில மாநாட்டில் மு.க .ஸ்டாலின் பேச்சு

திமுக சார்பில், சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ‘ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்’ என்றக் கருப்பொருளில், மாபெரும் நிர்வாகிகள் சந்திப்பு மாநில மாநாடு திருச்சி சிறுகனூரில் நடைபெற்றது.

முதல்வர் ஸ்டாலின் மாநாடு நடைபெற்ற சிறுகனூருக்கு வருகை தந்த போது, வழிநெடுகிலும் முதல்வருக்கு திமுகவினர் வரவேற்பு அளித்தனர். மாநாடு திடலுக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்த 100 அடி உயர கொடி கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வந்து வேனில் நின்றபடி மாநாடு அரங்குக்குள் சென்றார். பின்னர் மாநாடு மேடை வரை போடப்பட்டிருந்த ரேம்பில் தொண்டர்களை பார்த்து கையசத்தபடி நடந்து சென்றார். முதல்வரை பார்த்த திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தங்களது கழுத்தில் அணிந்திருந்த கருப்பு-சிவப்பு துண்டை வீசி உற்சாகமாக வரவேற்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்ததும் வாணவேடிக்கை நடத்தப்பட்டது. மாநாடு மேடைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் ஆகியோர் வெள்ளி செங்கோல் மற்றும் வீர வாள் ஆகியவற்றை நினைவுப்பரிசாக வழங்கினர். சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் திரண்டிருந்த மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது, எல்லா சாலைகளும், திசைகளும், மக்களும் திருச்சியை நோக்கி. திரும்பும் திசையெல்லாம் கருப்பு - சிவப்பு, அண்ணாவின் தம்பிகள், கலைஞரின் உடன் பிறப்புகள், குமரியிலிருந்து - குமிடிப்பூண்டி வரை தமிழகமே சிறுகனூரில் திரண்டு, பெருகனூராக ஆகியிருக்கிறது. எதிரகளால் வீழ்த்த முடியாத திமுகவின் பெரும் சேனை இங்கு திரண்டுள்ளது.

 இந்த சேனையின் தலைமைத் தொண்டனாக ஸ்டாலின் அழைப்பே ஏற்று வந்துள்ள உடன் பிறப்புகளுக்கு எனது வணக்கம். கடந்த 3 மாதமாக நாம் நடத்துவது மாநாடுகள் தான். உதயநிதி மண்டல வாரியாக நடத்திய இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடுகள், கனிமொழி நடத்திய மகளிர் அணி வெல்லும் தமிழ் பெண்கள் மாநாடு, சென்னை, மதுரை, கோவை, திருப்பத்தூர் மண்டல அளவிலான பூத் நிர்வாகிகள் பயிற்சி மாநாடு என லட்சக்கணக்கான நிர்வாகிகளை அழைத்து மாநாடுகளை நடத்தி தேர்தல் பணிகளை தொடங்கினோம். அதற்கெல்லாம் உச்சசமாக இன்று 10 லட்சம் பேர் பங்கெடுத்துள்ள பெரிய மாாநடு நடக்கிறது.

இங்கு நான் வந்தபோது மாநாடு நுழைவு வாயில் முதல் மேடை வரை நீங்கள் கொடுத்துள்ள வரவேற்பு அடடடா.. உங்கள் முகத்தில் பார்த்த மகிழ்ச்சி எனது வயதை குறைத்துள்ளது. அந்தத்தெம்போடு நிற்கிறேன். கடந்த வாரம் எனது பிறந்தநாளன்று போனில் மற்ற மாநில தலைவர்கள் வாழ்த்து சொன்னபோது, எனது வயசை நம்பவில்லை. என்னை இவ்வளவு இளமையாக வைத்திருப்பது நீங்கள் தான். உங்கள் அன்பு தான். என்ன தவம் செய்தனை என ஆன்மிக அன்பர்கள் சொல்வதுபோல உங்களை போன்ற தொண்டர்கள் கிடைக்க நான் என்ன தவம் செய்தேனோ? கோடிக்கணக்கான உடன்பிறப்போடு தலைமைத் தொண்டனாக தேர்ந்தெடுத்து நீங்கள் தான். தாய் தமிழ்நாட்டின் முதல்வராக நான் பொறுப்பேற்க காரணமும் நீங்கள் தான். உங்களால் தான் நான் வளர்ந்தேன், உயர்ந்தேன். உங்களுக்காகத் தான் நான் வாழ்கிறேன். இந்த பாசப் பிணைப்பு உடன்பிறப்புகளின் இந்த உயிர்துடிப்பு இன்றுநேற்று ஏற்பட்ட பந்தம் அல்ல. திராவிட இயக்கம் உருவான காலம் தொட்டு 75 ஆண்டு காலம் தொடரும் அன்பு. எத்தனையோ திருப்புமுனைக்கு அடித்தளமிட்ட தீரர்கள் கோட்டமாம் திருச்சியில் இந்த மாநாட்டை நடத்துகிறோம். இந்த மாநாடு எதற்கு என கேட்கின்றனர். ஒரு கிரிக்கெட் மேட்சில் முதல் பாலிலிருந்து ரன் அடிப்பது முக்கியம். அதேபோல இறுதி ஓவர்களில் அடித்து ஆடி இறுதிப்பந்தில் வெற்றிப் பந்தாக சிக்ஸர் அடித்து வெற்றி பெறுவது என்பது பிரம்மாண்ட இறுதி வெற்றியாக இருக்கும். அப்படிப்பட்ட வெற்றியை 2026ல் பெறுவதற்காகத் தான் இந்த மாநாடு. அதற்காகத் தான் இந்த மாபெரும் மாநில மாநாட்டை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார் நேரு. நேருவிடம் மாநாடு என்று சொல்லிட்டால் போதும் அவருக்குள் புதிய ஆற்றல் வந்துவிடும். நாம் நினைப்பதை விட பிரம்மாண்டமாக செய்வது தான் நேருவின் ஸ்டைல். அதனால் தான் நான் எப்போதும் மாநாடு என்றால் நேரு; நேரு என்றால் மாநாடு. இப்பக்கூட 200 ஏக்கரை தேர்ந்தெடுத்து 200 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என தொண்டர்களிடம் சொல்லிவிட்டார். நமக்கான கிரவுண்டை (மைதானம்) தயார் செய்து கொடுத்துள்ளார். இனிமேல் நாம் தொடர்ந்து அடித்து ஆட வேண்டும். மாபெரும் மாநாடுக்காக அயராது உழைத்த நேரு மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டு; வாழ்த்துக்கள். இன்று நாம் முழங்கும் ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்பது தனிப்பட்ட ஸ்டாலினுக்கான முழக்கம் அல்ல. நம்மை உருவாக்கிய திமுக தொடரட்டும் என்பது தான் இதன் உண்மையான பொருள். திருச்சி தமிழகத்தின் மையப்பகுதி மட்டும் அல்ல கழகத்தின் மாநாடு பகுதி. இன்று நாம் நடத்தியிருப்பது 12 மாநில மாநாடு. திருச்சி என்றால் திருப்பம், எழுச்சி, உணர்ச்சி, மகத்தான வெற்றி. அப்படிப்பட்ட திருச்சியில் மாபெரும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற நாம் கூடியிருக்கிறோம். கருணாநிதியால் வழிநடத்தப்பட்ட நாம் தான் தமிழ்நாட்டை தொடர்ந்து ஆள வேண்டும் என்ற உறுதியை இந்த மாநாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவிலேயே முதல் மாநிலக் கட்சியாக திமுகவை அண்ணா ஆட்சியில் அமர்த்தினார். அவர் வழியில் 5 முறை தமிழகத்தை கருணாநிதி ஆட்சி செய்தார். நீண்ட இடைவெளிக்குப்பிறகு 10 ஆண்டுகள் கழித்து உங்களில் ஒருவனான எனது தலைமையில் 6வது முறையாக ஆட்சிக்கு வந்தோம். இப்போது 7வது முறைாக அல்ல இனி எந்நாளும் திமுக தான் தமிழ்நாட்டை ஆளணும் என சூளுரைக்கத் தான் இங்கு கூடியுள்ளோம். இதுதான் அனைவரது பெரும் கடமை. தமிழினத்தை காக்க தகுதியும், திறமையும், உழைப்பும் கொண்ட ஒரே படை கருப்பு சிவப்பு படை தான். நமக்கென்று மாபெரும் வரலாறு உள்ளது. . சுயநலத்துக்காக எப்படியாவது முதல்வராக வேண்டும் என்ற நப்பாசையில் பழனிசாமி அடிமையாக கிடக்கிறார். அவரை வைத்து ஒட்டுமொத்த அதிமுகவை அழிக்கும் வேளையை பாஜக செய்கிறது. பிஹார் மாநிலத்தில் இதுவரை பாஜக முதல்வர் இருந்ததே இல்லை. நிதிஷ்குமாரை முன்னிருந்தி தேர்தலில் வெற்றி பெற்று காரியம் ஆனதும் அவரை ஓரம்கட்டி பாஜக முதல்வரை உள்ளே கொண்டு வரப்போகன்றனர். இதையேத் தான் தமிழ்நாட்டில் கொண்டு வர முயற்சிக்கின்றனர். நான் அடித்து சொல்கிறேன் இந்த ஸ்டாலின், திமுக இருக்கும் வரை தமிழ்நாட்டை ஆளவே முடியாது. நீங்கள் அந்தர் பல்டி அடித்தாலும், என்ன முகமுடி போட்டாலும், புதுசு புதுசா யாரை கூட்டி வந்தாலும் எத்தனை ஏவல் அமைப்புகளை வைத்து மிரட்டிப்பார்த்தாலும் தமிழ்நாடு எப்போதும் உங்களுக்கு அவுட் ஆஃப் கன்ட்ரோல் தான். நாங்கள் பார்க்காத படையெடுப்பா திமுக பார்க்காத மிரட்டலா, இந்தியா மேம்ப்பில் உள்ள எந்த மாநிலத்திலும் காவி அடிக்கலாம். தமிழ்நாட்டில் உங்கள் பாட்சா பலிக்காது. இங்கு எப்போதும் நாங்கள் தான். நாங்க மட்டும் தான் வெற்றி பெறுவோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0