ஆதவ் அர்ஜுனாவிற்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் சார்பில் கடும் கண்டனம் : கலைஞரின் மேடையிலேயே ஜெயலலிதாவை தைரிய லட்சுமி என்று புகழ்ந்தவர் ரஜினி

Mar 13, 2026 - 09:10
ஆதவ் அர்ஜுனாவிற்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் சார்பில் கடும் கண்டனம் : கலைஞரின் மேடையிலேயே ஜெயலலிதாவை தைரிய லட்சுமி என்று புகழ்ந்தவர் ரஜினி

ஆதவ் அர்ஜுனாவிற்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் சார்பில் கடும் கண்டனம் : கலைஞரின் மேடையிலேயே ஜெயலலிதாவை தைரிய லட்சுமி என்று புகழ்ந்தவர் ரஜினி

ஆதவ் அர்ஜுனாவிற்கு தலைவர் ரஜினிகாந்த் ரசிகர்கள் சார்பில் வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

யாரை பார்த்து, பயந்து அரசியலில் இருந்து விலகினார் என்று கூறுகிறாய்? 41 பேரைக் கொன்றுவிட்டு தலைமறைவான நீ பேசுகிறாயா வீரத்தைப் பற்றி?. என் தலைவனின் வீரம் நாடறியும். மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று கர்ஜித்தவர் எங்கள் தலைவர் ரஜினிகாந்த். கலைஞரை மேடையில் வைத்துக் கொண்டே, "இலவசங்கள் கொடுப்பதும் வாங்குவதும் தவறு" என்று தில்லாக கூறியவர்.

அதே கலைஞர் முன்னிலையில் நடிகர் அஜித்குமார் அவர்கள், "பாராட்டு விழாவில் கலந்து கொள்ளுமாறு உங்கள் கட்சிக்காரர்கள் மிரட்டுகிறார்கள்" என்று சொன்ன பொழுது எழுந்து நின்று தைரியமாக கைதட்டி ஆமோதித்தவர் எங்கள் தலைவர் ரஜினிகாந்த்.

 கலைஞரின் மேடையிலேயே ஜெயலலிதாவை தைரிய லட்சுமி என்று புகழ்ந்தவர்.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கட்டிய Film Cityக்கு நடிகர் திலகம் சிவாஜியின் பெயரை வைக்காதது மிகப்பெரிய தவறு என ஜெயலலிதாவை மேடையில் வைத்துக் கொண்டே பேசியவர் எங்கள் தலைவர் ரஜினிகாந்த். உன் தலைவனைப் போல பதவி வெறி பிடித்தவர் இல்லை. எங்கள் தலைவர் அவர்கள் அரசியலுக்கு வருவேன் என்று சொன்னபோது கூட தான் முதலமைச்சராக மாட்டேன் வேறு ஒருவரைத்தான் முதலமைச்சராக்குவேன் என்று கூறியவர். கொரோனா காலத்தில் தன்னால் மக்கள் பலியாக கூடாது என்ற ஒரே காரணத்திற்காக அரசியலை விட்டு விலகியவர். தலைவர் ரஜினிகாந்த் பெயரைச் சொல்லி வளர்ந்த நன்றி கெட்டவன் விஜய். படம் ரிலீஸ் ஆவதற்காக கொடநாடு வாசலில் ஜெயலலிதாவை பார்க்க காத்துக் கிடந்தவன் விஜய். கைகட்டி நின்று படத்தை ரிலீஸ் செய்ய சொல்லி வேண்டுகோள் விடுத்தவன் கோழை விஜய். நிருபர்களை சந்திக்க தைரியம் இல்லாத கோழை விஜய். உழைப்பாளி பட பிரச்சனையின் போது ஒட்டுமொத்த தயாரிப்பாளர் சங்கமே எங்கள் தலைவர் ரஜினிக்கு எதிராக நின்ற போது அதை தைரியமாக எதிர்கொண்டு வெற்றி பெற்றவர் எங்கள் தலைவர் ரஜினிகாந்த். எங்கள் தலைவரைப் பற்றி எதுவும் தெரியவில்லை என்றால் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும்.அனாவசியமாக அவரை விமர்சித்தால் தலைவர் ரசிகர்களாகிய நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம் ஜாக்கிரதை இவ்வாறு ரஜினி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0