மாணவி நிர்பயாவுக்கு நீதி வேண்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

Mar 14, 2026 - 21:41
Mar 14, 2026 - 21:49
மாணவி நிர்பயாவுக்கு நீதி வேண்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் தலைமையில்  மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

மாணவி நிர்பயாவுக்கு நீதி வேண்டி திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் ஊரில் வசித்த பிளஸ் 2 மாணவி நிர்பயாவை சில நயவஞ்சக கயவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி முகம் உள்ளிட்ட உடல் பாகங்களை சிதைத்து கொடூரமாக கொன்ற குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவி நிர்பயாவுக்கு நீதி வேண்டி

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் துணை மேருமான ஜெ.சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். 

இந்த நிகழ்வில் அமைப்பு செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான டி.ரத்னவேல், பகுதி செயலாளர்கள் அன்பழகன், பூபதி, சிந்தாமணி முத்துக்குமார், சுரேந்தர், வெங்கட் பிரபு, ரோஜர், எம். ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் ரஜினிகாந்த், கலை பிரிவு செயலாளர் ஜான் எட்வர்டு,

முன்னாள் மகளிர் அணி செயலாளர் தமிழரசி சுப்பையா, முன்னாள் மருத்துவரணி தலைவர் சுப்பையா பாண்டியன், மகளிர் அணி துணை தலைவி வழக்கறிஞர் புவனேஸ்வரி, மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெயஸ்ரீ, டி.ஆர்.சுரேஷ் குமார், வாழைக்காய் மண்டி சுரேஷ், புத்தூர் ரமேஷ், தில்லை விஸ்வா மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0