மகளிர் தின விழாவில் ஆளுநர் விருதாளர்க்கு பாராட்டு

Mar 16, 2026 - 13:36
மகளிர் தின விழாவில்  ஆளுநர் விருதாளர்க்கு பாராட்டு

மகளிர் தின விழாவில் ஆளுநர் விருதாளர்க்கு பாராட்டு

திருச்சி திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்றம் சார்பில் மகளிர் தின விழா திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. மன்ற செயலாளர் முனைவர் ஜெயலட்சுமி வரவேற்றார்.

 எழுத்தாளர் கேத்தரின் ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். சாந்தி உதயகுமார் முன்னிலை வகித்தார். பெண் ஓதுவார் அங்கையர் கன்னி, பெண் ஆட்டோ ஓட்டுநர் ஆனந்தி, தூய்மை பணியாளர் பிரியா உள்ளிட்டோர் சிறப்பு செய்யப்பட்டனர். ஆதரவற்ற உரிமை கோரப்படாத அனாதை பிணங்களை உரிய மரியாதையுடன் கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்து வரும் தன்னலமற்ற மனிதநேய செயலைப் பாராட்டி திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அலுவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு தமிழ்நாடு ஆளுநர் விருதினை வழங்கினார். ஆளுநர் விருது பெற்ற அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாரை முனைவர் அருணா தினகரன் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். உலகத் தாய்மொழி தினத்தில் நந்தவனம் அறக்கட்டளையின் தமிழ் மாமணி விருது மற்றும் காவிரி முத்தமிழ் சங்கத்தின் சிறார் இலக்கிய விருது பெற்ற மன்றத் தலைவர் தமிழ்ச் செம்மல் கோவிந்தசாமி பாராட்டப்பட்டார்.

 மகளிர் தின விழாவில் பெண்கள் சிறப்புரை மற்றும் பாட்டரங்கம் நடைபெற்றது. பத்மஸ்ரீ சுப்புராமன், திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கம் அமைச்சர் உதயகுமார், நந்தவனம் சந்திரசேகரன், பன்முகக் கலைஞர் முருகானந்தம், பொருளாளர் பாலமுருகன், வைகுண்ட மூர்த்தி, பீட்டர் நடேசன், அரிமா முகமதுஷபி, மனநல ஆலோசகர் லட்சுமி நந்தகுமார், சுமித்ரா தேவி மாதவன், முதுகலை தமிழாசிரியை மங்களமேரி, மாமன்ற உறுப்பினர் பொற்கொடி, முதுகலைத் தமிழாசிரியை செசிலி, கவிஞர் தாமரை, தமிழாசிரியை சித்ரா, முனைவர் அருணாச்சலம், நன்மாறன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிறைவாக தமிழி விமலா நன்றி கூறினார்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0