106 வயது முதியவருக்கு கண் அறுவை சிகிச்சை செய்து திருச்சி தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

Mar 19, 2026 - 11:36
106 வயது முதியவருக்கு கண் அறுவை சிகிச்சை செய்து திருச்சி தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

106 வயது முதியவருக்கு கண் அறுவை சிகிச்சை செய்து திருச்சி தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

உலக கண் நீர் அழுத்த விழிப்புணர்வு தினம் மார்ச் இரண்டாவது வாரம் கடைபிடிக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று திருச்சி தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பில், கண் நீர் அழுத்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில் மருத்துவமனை மருத்துவர்கள் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டு கண் நீர் அழுத்த நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணிக்கு பிறகு மருத்துவர் அர்ச்சனா தெரசா மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... குளுக்கோமா எனும் கண் நீர் அழுத்த நோய் உலகளவில் மக்களிடம் சரி செய்ய முடியாத பார்வை இழப்பிற்கு மிக முக்கியமான காரணமாக விளங்குகிறது. குளுக்கோமா, பார்வையை மெதுவாக குறைய செய்யும். பெரும்பாலான மக்களுக்கு அந்த நோயால் எந்த அறிகுறிகளும் இருப்பதில்லை.

எனவே, சிறிது சிறிதாக பார்வை இழப்பு ஏற்படுகிறது. 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் கிட்ட பார்வை சர்க்கரை நோய், கண்ணில் காயம், தொடர்ச்சியாக ஸ்டீராய்டு மருந்துகள் பயன்படுத்துவோர் மற்றும் குடும்பத்தில் ரத்த வழி உறவினர்களுக்கு குளுக்கோமா நோய் இருப்பது ஆகியோர்களுக்கு குளுக்கோமா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குளுக்கோமாவுக்கான சிகிச்சை முறைகள் கண் சொட்டு மருந்து, லேசர் மற்றும் அறுவை சிகிச்சை ஆகும். திருச்சி தி ஐ பவுண்டேஷனின் சாதனைகளின் சிறப்பம்சங்களில் கண் அழுத்தத்தாலும், கண்புரையாலும் பாதிக்கப்பட்ட திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த ராஜு என்கிற 106 வயது முதியவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் தனது பார்வையை திரும்ப பெற்றவராக தனது தேவைகளைத் தாமாகவே கவனித்து கொள்ளும் அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளார் என தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0