திருச்சி கிழக்குத் தொகுதியில் திமுக சார்பில் இனிகோ இருதயராஜ், அதிமுக சார்பில் ராஜசேகரன் போட்டியா

Mar 25, 2026 - 13:57
Mar 25, 2026 - 14:05
திருச்சி கிழக்குத் தொகுதியில் திமுக சார்பில் இனிகோ இருதயராஜ், அதிமுக சார்பில் ராஜசேகரன் போட்டியா

திருச்சி கிழக்குத் தொகுதியில் திமுக சார்பில் இனிகோ இருதயராஜ், அதிமுக சார்பில் ராஜசேகரன் போட்டியா

வருகிற சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் முக்கிய கட்சிகளின் சார்பில் யார் யார் போட்டியிடுகிறார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஆளும் திமுகவில் தற்போதைய எம் எல் ஏ இனிக்கோ இருதயராஜ், மாநகர செயலாளர் மதிவாணன் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் தற்போதைய எம்எல்ஏ இனிகோ இருதயராஜுக்கு மேலிட செல்வாக்கும், மாநகர செயலாளர் மதிவாணனுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆதரவும் உள்ளது. இத்தொகுதியில் சிறுபான்மையினரின் வாக்குகள் அதிக அளவில் உள்ளதால் தற்போதைய நிலவரப்படி இனிகோ இருதயராஜ் அவர்களே போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அதிமுகவில் மாவட்ட செயலாளர் சீனிவாசன், முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் ஆகியோரிடையே யாருக்கு சீட் என்ற எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் சமீபத்தில் கட்சியில் இணைந்து மாவட்ட பொருளாளராக பதவி ஏற்ற இந்திரா கணேசன் கல்வி குழுமங்களில் சேர்மன் ராஜசேகரனுக்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது இவர் வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்தவர் கிழக்குத் தொகுதியில் வெள்ளாளர் சமூக மக்கள் அதிக அளவில் உள்ளதால் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஆகையால் திருச்சி கிழக்குத் தொகுதியில் திமுக சார்பில் இனிகோ இருதயராஜும் அதிமுக சார்பில் ராஜசேகர் எனும் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளது அவ்வாறு இருவரும் போட்டியிட்டால் தற்போதைய எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் மீது உள்ள அதிருப்தி காரணமாகவும், ஓபிஎஸ் அணியில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் வெள்ளமண்டி நடராஜன் எடப்பாடி அணியில் சேர்ந்ததன் மூலமும், மேலும் மாவட்டச் செயலாளர் மற்றும் ஆவின் சேர்மன் ஆகியோரிடமும் நன்மதிப்பை பெற்றதாலும் அதிமுக வேட்பாளராக போட்டியிட ராஜசேகரனுக்கு வாய்ப்பு கிடைத்தால் திருச்சி கிழக்குத் தொகுதியில் அதிமுக தன்னுடைய வெற்றியை பதிவு செய்யும் என்று அதிமுக நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.

What's Your Reaction?

Like Like 9
Dislike Dislike 1
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0