திருச்சி ஸ்ரீரங்கத்தில் முன்னாள் அரசு கொறடா மனோகரன் போட்டி

Mar 27, 2026 - 20:51
திருச்சி ஸ்ரீரங்கத்தில் முன்னாள் அரசு கொறடா மனோகரன் போட்டி

திருச்சி ஸ்ரீரங்கத்தில் முன்னாள் அரசு கொறடா மனோகரன் போட்டி

அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு முன்னாள் அரசு கொறடா மனோகரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு ஸ்ரீரங்கம் தொகுதி மக்களிடையேயும், அதிமுக தொண்டர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ​அதிமுகவின் அடிமட்டத் தொண்டனாகத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி, மாமன்ற உறுப்பினர், கோட்டத் தலைவர், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராகி அரசு தலைமை கொறடாளராகவும் பதவி வகித்தார். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டபோது தொகுதியின் பொறுப்பாளராக செயல்பட்டார். இதன் மூலம் ஜெயலலிதா அவர்களின் நன்மதிப்பைப் பெற்றார். திருச்சி மாவட்ட அரசியலில் நீண்ட அனுபவம் கொண்டவர் என்பதால், ஸ்ரீரங்கம் தொகுதி மக்களின் தேவைகளை நன்கு அறிந்தவர். எளிமையான அணுகுமுறை மற்றும் உதவும் குணம் கொண்டவர் எனப் பெயர் பெற்றவர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0