“மீண்டும் நம் ஆட்சிதான்" எடமலைப்பட்டி புதூர் பகுதியில் வாக்கு கேட்ட அமைச்சர் கே என் நேருவிடம் பொதுமக்கள் உறுதி

Apr 7, 2026 - 13:23

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், கழக முதன்மைச் செயலாளருமான அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மாநகராட்சியின் 57-வது வார்டுக்கு உட்பட்ட எடமலைப்பட்டி புத்தூர் பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் தெரு, அரசு காலனி, எம்.ஜி.ஆர் நகர், முருகன் நகர், காதிகிராப் காலனி, அந்தோணியார் கோவில் தெரு, நல்ல தண்ணி கேனி தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

அப்போது பொதுமக்கள் அவருக்கு மாலை அணிவித்தும், ஆராத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். “மீண்டும் நம் ஆட்சிதான்" எனக்கூறி பொதுமக்கள் அவருடன் கைகுலுக்கி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

 இந்த நிகழ்வின் போது மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், மாவட்ட துணைச் செயலாளர் முத்துச்செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி பகுதி செயலாளர் காஜாமலை விஜி மற்றும் கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தொண்டர்கள் உடனிருந்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0