மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமையும் போது, 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் : திருவெறும்பூர் தொகுதியில் வாக்கு சேகரித்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

Apr 15, 2026 - 15:04
மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமையும் போது, 8-ஆம் வகுப்பு வரை பயிலும்  மாணவர்களுக்கும் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் : திருவெறும்பூர் தொகுதியில் வாக்கு சேகரித்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமையும் போது, 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் : திருவெறும்பூர் தொகுதியில் வாக்கு சேகரித்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருச்சி மாநகரம், காட்டூர் பகுதி 43-வது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளரும், அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காலை முதலே கலைஞர் தெரு, காவேரி நகர், தெற்கு காட்டூர், பர்மா காலனி, பிலோமினால்புரம், முருகன் கோவில் தெரு, மலையப்பா நகர், கமலா நேரு நகர், குறிஞ்சி நகர், அண்ணா தெரு மற்றும் ராயல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று அவர் வாக்கு சேகரித்து பேசும் போது, 2021 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில், 43-வது வார்டில் மட்டும் 15 கோடியே 23 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை வசதி, குடிநீர் வசதி, மழைநீர் வடிகால் போன்ற பல்வேறு உட்கட்டமைப்புப் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன என்றார். மேலும் ஒரு பள்ளி நிகழ்ச்சியின் போது, முதலமைச்சர் ஒரு மாணவியிடம் காலை உணவு சாப்பிட்டீர்களா என்று கேட்டதற்கு, அந்த மாணவி இல்லை என்று பதிலளித்தார். அந்த ஒரு சிறுமியின் பதில்தான் இன்று தமிழகத்தில் 20 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் "காலை உணவுத் திட்டமாக" உருவெடுத்தது என்று அமைச்சர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

 மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமையும் போது, இத்திட்டம் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். இதன் மூலம் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுவார்கள் என உறுதி அளித்தார். 2016-ல் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த போது 30% கோரிக்கைகளையே நிறைவேற்ற முடிந்தது.

ஆனால் 2021-ல் நீங்கள் அளித்த பெருவாரியான வெற்றியால், அமைச்சராகப் பொறுப்பேற்று இன்று 10-ல் 7 கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளேன். மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடிக்க மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், விடியல் பயணம் திட்டம், மகளிர் உரிமைத் தொகை மற்றும் நான் முதல்வன் திட்டம் போன்ற சாதனைகளை விளக்கி, தன்னை உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0