திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் முந்துகிறார் : இறுதி கட்ட பிரச்சாரத்தால் திணறியது கிழக்கு தொகுதி
திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் முந்துகிறார் : இறுதி கட்ட பிரச்சாரத்தால் திணறியது
திருச்சி கிழக்கு திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் பம்பரமாக சுழன்று இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது எடப்பாடி ஆட்சி அமைந்ததும் தாம் செய்யப்போக உள்ள வளர்ச்சி திட்டங்களை எடுத்துக் கூறி, வீடு, வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து இரட்டை இலைக்கு ஓட்டு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க மலர் தூவி ராஜசேகரனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது தொகுதியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதே எனது நோக்கம் என்றார். மேலும் அவர் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது, கடந்த ஐந்து ஆண்டுகளாக திருச்சி கிழக்கு தொகுதியில் எந்த வளர்ச்சியும் இல்லை. எனக்கு வாய்ப்பளித்தால் குடிநீர்,தெருவிளக்கு,சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவேன். சில பகுதிகளில் குண்டும் குழியுமான சாலைகள், பாதாள சாக்கடையில் கழிவு நீர் கசிவு, துர்நாற்றம் மற்றும் தீர்க்கப்படாத குப்பை கிடங்கு மேலாண்மை போன்றவை மக்களின் அன்றாட வாழ்வை பெரிதும் பாதித்துள்ளன. அடிப்படை வசதிகளில் ஒரு ஆக்கபூர்வமான மாற்றத்தை நான் கொண்டு வருவேன். நான் மக்களோடு மக்களாக இருந்து தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவேன்.திருச்சி கிழக்கு தொகுதியை ஒரு முன்மாதிரி தொகுதியாக மாற்றி காட்டுவேன். உங்களுடன் எப்போதும் இருப்பேன். நான்மண்ணின் மைந்தன். திருச்சி கிழக்கு தொகுதியின் முன்னேற்றத்திற்காக ஒரு முழுமையான வளர்ச்சி திட்டத்தை தயாரித்து வைத்துள்ளேன். இந்த தொலைநோக்கு பார்வை திட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை பெரிதும் கவர்ந்துள்ளதால், திருச்சி கிழக்கு தொகுதி வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என அவர் உறுதியளித்தார். அதிமுக ஆட்சியில் மட்டும்தான் மக்களைத் தேடி அரசும், திட்டங்களும் வரும். திமுக ஆட்சியில் மக்களை தேடி யாரும் வரமாட்டார்கள். எனவே மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். கிழக்கு தொகுதியை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல நீங்கள் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டளித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கிழக்குத் தொகுதி முழுவதும் இவரது பிரச்சாரம் மக்களிடையே நல்ல முறையில் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிட்டத்தக்கது.
இவரது பிரச்சார யுத்தியின் மூலம் திருச்சி கிழக்கு தொகுதியில் இவரது வெற்றி உறுதி செய்யப்பட்டதாகவே கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் கூறி வருகின்றனர். இவரது இறுதி கட்ட பிரச்சாரத்தால் திருச்சி கிழக்கு தொகுதி, மக்கள் வெள்ளத்தால் திணறியது. முழுவதும் பிரச்சாரத்தின் போது மாவட்ட செயலாளர் சீனிவாசன், அமைப்புச் செயலாளர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன், மற்றும் அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0