காவேரி ஆற்றங்கரை நீரில் இறந்து கிடந்த நபர் : நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்

Jun 2, 2026 - 09:44
காவேரி ஆற்றங்கரை நீரில் இறந்து கிடந்த நபர் : நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்

காவேரி ஆற்றங்கரை நீரில் இறந்து கிடந்த நபர் : நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்

திருச்சி பழூர் காவேரி ஆற்றங்கரையில் உள்ள படித்துறை அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் உடலில் உடைகள் ஏதும் இல்லாமல் நீரில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த ஜீயபுரம் காவல்துறையினர் சம்பவ இடம் சென்று பார்க்கையில் இறந்த நபர் உடலில் உடைகள் ஏதுமில்லாமல் இடுப்பில் கருப்பு அரைஞான் கயிறு மட்டும் கட்டிருந்த நிலையில் இறந்து கிடந்தார். மேற்படி பிரேதத்தை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனை அமரர் அறையில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். மேற்படி நபர் பெயர் விலாசம் ஏதும் தெரியவில்லை. உடலை யாரும் உரிமை கோரப்படாத நிலையில் உடலை நல்லடக்கம் செய்வதற்காக ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாரிடம் ஜுயபுரம் காவல் நிலைய இரண்டாம் நிலை காவலர் லோகநாதன் தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் திருச்சி தென்னூர் குழுமிக்கரை மயானத்தில் ஜுயபுரம் காவல் நிலைய இரண்டாம் நிலை காவலர் லோகநாதன் முன்னிலையில் திருச்சி குழுமிக் கரை மயானத்தில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதையுடன் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0