திருச்சியில் புதுப்பொலிவுடன் விரிவாக்கம் செய்யப்பட்ட ஹரிணி ஜூவல்லர்ஸ் திறப்பு
திருச்சியில் புதுப்பொலிவுடன் விரிவாக்கம் செய்யப்பட்ட ஹரிணி ஜூவல்லர்ஸ் திறப்பு
திருச்சியில் புதுப்பொலிவுடன் பிரமாண்டமாக விரிவாக்கம் செய்யப்பட்ட ஹரிணி ஜூவல்லர்ஸ் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகாமையில் சிந்தாமணி பஜார் பகுதியில் ஹரிணி ஜுவல்லர்ஸ் நிறுவனம் அமைந்துள்ளது. திருச்சி மாநகர மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ள இந்நிறுவனத்தின் 12 -வது ஆண்டு தொடக்க விழா மற்றும் ஹரிணி ஜூவல்லர்ஸ்ன் விரிவாக்கம் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்ட புதிய ஷோரூம் திறப்பு விழாவில் இன்ஸ்டிடியூஷன் ஆப் வால்யூவர்ஸ் தேசிய தலைவர் பி. கே. தியாகராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய ஷோரூமை திறந்து வைத்தார். பனானா லீப் ஹோட்டல் நிறுவனர் ஆர் மனோகரன், திருச்சி ரெட்டியார் அறக்கட்டளை தலைவர் கே. மணிமாறன் ஆகியோர் குத்து விளக்கேற்றி சிறப்பித்தார்கள். முன்னதாக ஹரிணி ஜுவல்லர்ஸ் நிர்வாகத்தினர் இரா. கனகராஜ், மணிமேகலை கனகராஜ், இரா. செல்வராஜ், அனுசியா செல்வராஜ், அ.வெங்கடாசலம், சசிகலா வெங்கடாசலம், செ.ராம்குமார், முல்லை ராம் குமார் ஆகியோர் வரவேற்றனர். விழாவில் திருச்சி மாவட்ட ரெட்டி நல சங்க செயலாளர் ரவி, கே.ஆர்.டி மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் சுரேஷ், எம்.ஆர்.ஜி. டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் காந்தி, டோல்கேட் ரெட்டியார் நலச்சங்க தலைவர் மதிவாணன், கரூர் மாவட்ட ரெட்டி நலச் சங்க தலைவர் பாலன், செயலாளர் அசோக்குமார், பொருளாளர் ஜெயராமன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருச்சி ஹரிணி ஜுவல்லர்ஸ் நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0