காமராஜர் பிறந்த நாள் விழாவை ஒரு வாரம் சிறப்பாக கொண்டாட காமராஜ் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா மாநில பொது குழு கூட்டம் தீர்மானம்
காமராஜர் பிறந்த நாள் விழாவை ஒரு வாரம் சிறப்பாக கொண்டாட காமராஜ் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா மாநில பொது குழு கூட்டம் தீர்மானம்
காமராஜ் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா மாநில பொது குழு கூட்டம் மாநில தலைவர் வழக்கறிஞர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முனைவர் சேதுராமன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தேசிய பொதுச்செயலாளர் முனைவர் ஜான்குமார், முன்னாள் எம்பி நீலலோகிததாஸ் நாடார் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள். மேலும் திருச்சி இளங்கோவன், ராமநாதபுரம் சுல்தான் சம்சூல் கபீர், திருச்சி சிற்றம்பலம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மேலும் மத்திய கமிட்டி உறுப்பினர்கள் ஜெயக்குமார், புதுக்கோட்டை விஜய ரகுநாதன், ராமநாதபுரம் குகன், மாநில கமிட்டி உறுப்பினர்கள் முருகேசன், பிரேம் ஆனந்த், திண்டுக்கல் சுசிலா ராணி, தஞ்சாவூர் அப்துல் அஸ்ர்ப் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஜூலை 15 முதல் தமிழகத்தில் ஒரு வாரம் நடைபெற உள்ள பெருந்தலைவர் காமராஜரின் 124 வது பிறந்த நாள் விழா சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் காமராஜ் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா ஆரம்பிக்கப்பட்டு ஐம்பதாம் ஆண்டு பொன்விழா சம்பந்தமாகவும், அமைப்பை பலப்படுத்துவது சம்பந்தமாகவும் ஆலோசிக்கப்பட்டது.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
1
Angry
0
Sad
0
Wow
0