திருச்சியில் கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேஷன் முன்னாள் தலைவர் ரெவரண்ட் தர்மராஜ் 11 ஆம் ஆண்டு நினைவு தினம் : மாணவ மாணவிகளுக்கு கல்வித் தொகை வழங்கல்

Jun 21, 2026 - 22:10
Jun 21, 2026 - 22:13
திருச்சியில் கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேஷன் முன்னாள் தலைவர் ரெவரண்ட் தர்மராஜ்  11 ஆம் ஆண்டு நினைவு தினம் : மாணவ மாணவிகளுக்கு கல்வித் தொகை வழங்கல்

திருச்சியில் கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேஷன் முன்னாள் தலைவர் ரெவரண்ட் தர்மராஜ் 11 ஆம் ஆண்டு நினைவு தினம் : மாணவ மாணவிகளுக்கு கல்வித் தொகை வழங்கல்

திருச்சியில் கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேஷன் முன்னாள் தலைவர் ரெவரண்ட் A.தர்மராஜ் அவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவு தினம் இதன் தலைவர் ரெவரெண்ட் ஆபிரகாம் தாஸ் தலைமையில் திருச்சியில் கொண்டாடப்பட்டது. திருச்சி பாலக்கரை வேர் ஹவுஸ் புனித உத்திரிய மாதா கல்லறையில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் கிரம்மர் சாண்டகிரன் பவுண்டேஷன் செயலாளர் ஆபிரகாம் தாஸ் தலைமையில் மலம்பட்டி உள்ள கிறிஸ்துவ ஆலயத்தில் பிரார்த்தனை செய்யப்பட்டது.

பின்னர் 11 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு கல்வித் தொகையும், ஏழை எளிய மக்களுக்கு உதவித்தொகை தலைவர் ஆபிரகாம் தாஸ் வழங்கினார்.

 இந்நிகழ்ச்சியில் சொத்து அதிகாரி துரை, பாஸ்டர் சாமுவேல், கிளை போதகர்கள் மரிய தாஸ், ஜான் பிரிட்டோ மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0