இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களில் சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லா தினம் அனுசரிப்பு

Jul 3, 2026 - 18:22
Jul 3, 2026 - 18:23
இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களில் சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லா தினம் அனுசரிப்பு

இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களில் சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லா தினம் அனுசரிப்பு

இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை, இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியின் உன்னத் பாரத் அபியான் (Unnat Bharat Abhiyan) அமைப்புடன் இணைந்து, சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லா தினத்தை முன்னிட்டு இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் திறந்தவெளி அரங்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர். இந்நிகழ்ச்சியை இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் செயலாளர் ஜி. ராஜசேகரன் தொடங்கி வைத்து, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துவது காலத்தின் கட்டாயம் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து, கல்வி நிறுவனங்களின் இயக்குநர் டாக்டர் ஜி. பாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கி, இயற்கை வளங்களைப் பாதுகாக்க சுற்றுச்சூழல் நட்பு வாழ்க்கை முறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். கல்வி நிறுவனங்களின் பதிவாளர் டாக்டர் மு. அனுசுயா சிறப்புரையாற்றி, பிளாஸ்டிக் கழிவுகளால் மனித ஆரோக்கியம், வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை விளக்கி, பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பது ஒவ்வொருவரின் சமூகப் பொறுப்பு என எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று "பிளாஸ்டிக் இல்லா உறுதிமொழி" ஏற்றனர். மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களுக்கு துணிப் பைகள் வழங்கப்பட்டன. இரண்டாம் ஆண்டு பி.எஸ்.எம்.எஸ். மாணவி செல்வி யோகபாலலட்சுமி விழிப்புணர்வு உரையாற்றி, பிளாஸ்டிக் மாசுபாட்டின் தீமைகள் மற்றும் அதனைத் தவிர்ப்பதற்கான நடைமுறைகள் குறித்து எடுத்துரைத்தார். நிகழ்ச்சியின் நிறைவாக அனைவரும் "தவிர்ப்போம் – குறைப்போம் – மறுபயன்படுத்துவோம் – மறுசுழற்சி செய்வோம் – மறுபரிசீலனை செய்வோம்" என்ற உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்தி, "பிளாஸ்டிக்கைத் தவிர்ப்போம்! பசுமையான பூமியைப் பாதுகாப்போம்!" என்ற முழக்கத்துடன் நிகழ்ச்சியை நிறைவு செய்தனர். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் ஏராளமான மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0