திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் நியமனம் : அதிக அளவில் இளைஞர்களுக்கு வாய்ப்பு : எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Jul 5, 2026 - 17:38
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் நியமனம் : அதிக அளவில் இளைஞர்களுக்கு வாய்ப்பு : எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் நியமனம் : அதிக அளவில் இளைஞர்களுக்கு வாய்ப்பு : எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

அண்மையில் திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக செயலாளராக என்ஜினியர் கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார் இதையடுத்து தற்பொழுது திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக நிர்வாகிகளை நியமனம் செய்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதன்படி திருச்சி மாநகர் மாவட்ட துணை செயலாளர்கள் செபஸ்டி பிளாரன்ஸ், வெல்லமண்டி சண்முகம், பேரவை மாவட்ட செயலாளர் பொன்னர், திருச்சி மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றம் மாவட்ட செயலாளர் வரகனேரி ராஜேந்திரன், ஜெயலலிதா எம் ஜி ஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சுந்தர் சிங், மாவட்ட மகளிர் அணி செயலாளர் வனிதா, மாணவரணி மாவட்ட செயலாளர் பாலா மோகன் ராஜ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்துமாரி, விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் நத்தர்ஷா, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ராஜ்மோகன், இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சரவணகுமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் தாயார் சீனிவாசன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன்,கலைப் பிரிவு மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பகுதிகள் வார்டு வாரியாக பிரிக்கப்பட்டு பகுதி செயலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி சிந்தாமணி பகுதியில் 12,12 ஏ, 12பி,13,13ஏ,13பி உட்பட்ட வட்டங்களுக்கு சிந்தாமணி மகாதேவன், மலைக்கோட்டை வடக்கு பகுதி 15,15ஏ,15பி, 19,19ஏ,19 பிஆகிய வட்டங்களுக்கு சுதாகர், மலைக்கோட்டை தெற்கு பகுதி 14,14 ஏ,14 பி,17, 17 ஏ,17 பிஆகிய வட்டங்களுக்கு அன்பழகன், காந்தி மார்க்கெட் பகுதி 18,18ஏ,20,20 ஏ,20பிஆகிய வட்டங்களுக்கு கலிலுல் ரஹ்மான், பாலக்கரை வடக்கு பகுதி 21,21ஏ,21பி, 30,30ஏ,30 பிஆகிய வட்டங்களுக்கு இலியாஸ், பாலக்கரை தெற்கு பகுதி 31,31ஏ,31பி, 32, 32ஏ வட்டங்களுக்கு சுரேஷ் குப்தா, எடத்தெரு வடக்கு பகுதி 33,33ஏ,33பி, 48,49,49ஏ ஆகிய வட்டங்களுக்கு வாசுதேவன், எடத்தெரு தெற்கு பகுதி 34, 34பி,50,50 ஏ,50பி ஆகிய வட்டங்களுக்கு எடத்தெரு பாபு, சுப்பிரமணியபுரம் பகுதி 47,47ஏ, 47பி,59,59ஏ,59பி உட்பட்ட வட்டங்களுக்கு செல்லப்பா, ஏர்போர்ட் வடக்கு பகுதி 63,63ஏ,63பி, 64ஏ,64பி ஆகிய வட்டங்களுக்கு பாலாஜி, ஏர்போர்ட் தெற்கு பகுதி 61,61 ஏ,61பி,65,65ஏ,65பி ஆகிய வட்டங்களுக்கு சரவணன், உறையூர் வடக்கு பகுதி 9, 9ஏ,9பி,10,10ஏ,10பி ஆகிய வட்டங்களுக்கு உறந்தை முத்தையா, உறையூர் தெற்கு பகுதி 23,23ஏ,23பி, 24,24பி ஆகிய வட்டங்களுக்கு ஜான் எட்வர்டு, தில்லைநகர் பகுதி 11,11ஏ,11பி,22,22 ஏ 22பி ஆகிய வட்டங்களுக்கு தில்லை முருகன், அண்ணா நகர் பகுதி 28,28ஏ,28பி, 29,29ஏ,29பி ஆகிய வட்டங்களுக்கு ஜெகதீஸ்வரன், பீமநகர் பகுதி 51,51 ஏ,51பி,52,52ஏ,52பி ஆகிய வட்டங்களுக்கு எம் ஆர் ஆர்.முஸ்தபா, புத்தூர் பகுதி 26, 26ஏ,26பி,27,27ஏ,27 பி ஆகிய வட்டங்களுக்கு புத்தூர் ராஜேந்திரன், சண்முகா நகர் 8, 8ஏ,8பி,25,25ஏ,25பி ஆகிய வட்டங்களுக்கு பி எம்.குமார், பொன்நகர் பகுதி 53,53ஏ,53பி,54,54ஏ, 54 பி ஆகிய வட்டங்களுக்கு மோகன், கருமண்டபகுதி 55,55ஏ,55பி, 56,56ஏ,56பி ஆகிய வட்டங்களுக்கு முத்துக்குமார், காஜாமலை பகுதி 58,58ஏ,58பி,60, 60ஏ 60பி ஆகிய வட்டங்களுக்கு கலைவாணன், எடமலைப்பட்டி புதூர் பகுதி 57,57ஏ,57பி, 62,62ஏ,62பி ஆகிய வட்டங்களுக்கு வசந்தம் செல்வமணி ஆகியோர் பகுதி செயலாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே அவர்களுக்கு அனைத்து நிர்வாகிகளும் கழக உடன் பிறப்புகளும் முழு ஒத்துழைப்பு நல்கி கழக பணிகளை ஆற்றிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இளைஞர்களுக்கு வாய்ப்பு அதிமுகவில் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ள பகுதி செயலாளர்கள் பலர் வட்ட செயலாளர்களாக இருந்து மாற்றப்பட்டு உள்ளனர். இவர்களில் பெரும்பாலான இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் திருச்சி மாநகர அதிமுகவில் புது ரத்தம் பாய்ச்சப்பட்டு உள்ளது.இந்த அறிவிப்பு மூலம் திருச்சி மாநகரில் அதிமுக புதிய எழுச்சியுடன் செயல்படும் என்பது ஐயமில்லை.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0