செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டை பாராட்டி அதன் இயக்குநர் அருள் முனைவர் சகாயராஜ் சே ச அவர்களுக்கு ஹார்மனி 2026 விருது

Jul 15, 2026 - 17:01
Jul 15, 2026 - 17:03
செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டை பாராட்டி அதன் இயக்குநர் அருள் முனைவர் சகாயராஜ் சே ச அவர்களுக்கு ஹார்மனி 2026 விருது

செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டை பாராட்டி அதன் இயக்குநர் அருள் முனைவர் சகாயராஜ் சே ச அவர்களுக்கு ஹார்மனி 2026 விருது

கோட்டூர்புரம் ஜேசிஐ சென்னை ஹார்மனி சார்பில் சமூக நலன், கல்வி, மருத்துவம், தொழில்,தன்னார்வ சேவை, நிறுவன சமூகப் பொறுப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகள் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கி சிறப்பான பங்களிப்பை வழங்கிய தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களை கௌரவிக்கும் நோக்குடன் ஹார்மனி அவார்ட்ஸ் 2026 விருது வழங்கும் விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாக அரங்கில் இதன் தலைவர் ஆரோக்கிய ஆண்ட்ரூஸ் தலைமையில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகருமான ஜே சி டி பிரபாகர் மற்றும் ஜேசிஐ இந்தியாவின் தேசிய துணைத்தலைவர் மணிகண்டன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். மேலும் இந்நிகழ்வில் மார்க்ஸ்டுடியோ இந்தியா நிறுவனத்தின் தலைவர் பிரான்சிஸ் பாஸ்டியன் ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவன பொது மேலாளர் முனைவர் கணேஷ் சங்கரன் ஸ்டெல்லாண்டிஸ் இந்தியா நிறுவனத்தின் மேஜர் (ஓய்வு) அசீஷ் சர்மா கணேஷ் ஜஏஎஸ் அகாடமியின் நிறுவனர் கணேஷ் சுப்ரமணியன், ஐக்கிய நாடுகள் சபை எஸ்டிசி திட்ட இயக்குநர் சௌம்யா சங்கரன் மற்றும் பெரம்பூர் செவாலியர் எலிசபெத் கல்லூரியின் வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் பிரின்சி சூசன் நிறுவன பொது மேலாளர் முனைவர் கணேஷ் சங்கரன் செல்வகுமாரி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் 40 ஆண்டு காலமாக சமூக முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றி கொண்டிருக்கும் செயின்ட் ஜோசப் தன்னாட்சிக் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டை பாராட்டி அதன் இயக்குநர் அருள் முனைவர் சகாயராஜ் சே ச அவர்களுக்கு ஹார்மனி 2026 விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. சாதனையாளர்களை இனங்கண்டு கௌரவிப்பதோடு, இளைஞர்களுக்கு சமூகப் பொறுப்புணர்வை உருவாக்கும் நோக்கில் ஜேசிஐ சென்னை ஹார்மனி நிர்வாகிகளுடன். இணைந்து இந்நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். பல்வேறு தொழில் நிறுவனங்கள், நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் ஊடகத்தினர், சமூக ஆர்வலர்கள் தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0