போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை வலியுறுத்திய யுவின் உலகச் சாதனை நிகழ்ச்சி

Jul 15, 2026 - 18:10
Jul 15, 2026 - 18:10
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை வலியுறுத்திய யுவின் உலகச் சாதனை நிகழ்ச்சி

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை வலியுறுத்திய யுவின் உலகச் சாதனை நிகழ்ச்சி

இன்னர் வீல் கிளப் ஆஃப் திருச்சி மலைக்கோட்டை (IW District 321, Charter No. 5849) மற்றும் காவேரி மகளிர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி இணைந்து "யுவின் உலகச் சாதனை – மனித மொசைக் (Human Mosaic)" நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தின. இந்நிகழ்ச்சிக்கு இன்னர் வீல் கிளப் ஆஃப் திருச்சி மலைக்கோட்டையின் தலைவி திருமதி. மீனா சுரேஷ் வருகை தந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களையும் வரவேற்று, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

 அவரது தொலைநோக்குப் பார்வை, சிறந்த தலைமைத்துவம் மற்றும் சமூகப் பணிக்கான அர்ப்பணிப்பு இந்நிகழ்வின் வெற்றிக்கு வலுவான அடித்தளமாக அமைந்தது. இந்நிகழ்வில், இந்திய இன்னர் வீல் சங்கங்களின் அசோசியேஷன் தலைவர் திருமதி வினுதா ஹரீஷ் உலகச் சாதனை நிகழ்வைத் தொடங்கி வைத்தார். IW மாவட்டம் 321 மாவட்டத் தலைவர் திருமதி JRa. கீதா ரமேஷ், காவேரி மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் Dr.R. இராமலட்சுமி மற்றும் இந்நிகழ்வின் ஆதரவாளரான அனூஜ் டைல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் தனசேகரன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். சுமார் 500 மாணவிகள் மற்றும் இன்னர் வீல் உறுப்பினர்கள் பங்கேற்று, இன்னர் வீல் சின்னத்தை மனித மொசைக் வடிவில் உருவாக்கி, "போதைப்பொருள் பழக்கத்தை ஒழிப்போம்" என்ற வலிமையான சமூக விழிப்புணர்வு செய்தியை எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சி, இளைஞர்களிடையே ஆரோக்கியமான, பொறுப்பான மற்றும் போதைப்பொருள் இல்லாத வாழ்க்கை முறையை சமூகப் பொறுப்புணர்வு உள்ள இளைஞர்களின் பங்களிப்பு மற்றும் பொதுநலச் சேவை ஆகியவற்றில் வெளிப்படுத்தப்பட்டது இந்த உலகச் சாதனை முயற்சி, சமூக விழிப்புணர்வை மக்களிடையே பரப்பிய ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்தது. நிகழ்ச்சியை PDC. திருமதி சாந்தி ரவிச்சந்திரன் ஒருங்கிணைத்தார். மண்டல ஒருங்கிணைப்பாளர் (Zonal Coordinator) திருமதி ஆண்ட்ரூஸ் மேரி சேகர் மற்றும் இன்னர் வீல் கிளப் ஆஃப் திருச்சி மலைக்கோட்டையின் உறுப்பினர்கள் அனைவரும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற முழு ஒத்துழைப்பை வழங்கினர். கிளப் தலைவர் திருமதி மீனா சுரேஷ் மற்றும் செயலாளர் திருமதி பிரியா சிவலிங்கம் ஆகியோர், நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பித்த அனைத்து சிறப்பு விருந்தினர்கள், காவேரி மகளிர் கல்லூரி நிர்வாகம், பேராசிரியர்கள், மாணவிகள், தன்னார்வலர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0