திருச்சி மாவட்டம் இனாம் பெரிய நாயகி சத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாள் விழா

Jul 17, 2026 - 14:17
Jul 17, 2026 - 14:18
திருச்சி மாவட்டம் இனாம் பெரிய நாயகி சத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாள் விழா

திருச்சி மாவட்டம் இனாம் பெரிய நாயகி சத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாள் விழா

திருச்சி மாவட்டம் இனாம் பெரிய நாயகி சத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 123 வது பிறந்தநாள் விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் ந அழகு சுப்பிரமணியன் தலைமையில் கொண்டாடப்பட்டது.

 இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி மாவட்ட டிஎஸ்பி ஆனந்தகுமார், இனாமாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஓய்வு பெற்ற உதவி தலைமை ஆசிரியரும் முதுகலை பொருளியல் ஆசிரியருமான திருமதி செல்வராணி, சமுத்திரம் உயர்நிலைப்பள்ளி தலைமை தலைமை ஆசிரியர் ராஜசேகரன், பெரம்பலூர் மாவட்ட மண்டல மத்திய வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஸ்டாலின் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு மாணவ மாணவியர்களுக்கு கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் விழா சொற்பொழிவு ஆற்றினார்கள். இவ்விழாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு அறுசுவை மதிய உணவும், பள்ளிக்கு 50 ஆயிரம் மதிப்புள்ள ஆம்ப்ளிஃபையரையும் திருமதி செல்வராணி வழங்கினார். அவருக்கு பள்ளியின் பள்ளி மேலாண்மை குழு, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் அனைத்து ஆசிரியர்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள். கல்விக்கண் திறந்த காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழா சொற்பொழிவாக மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, கவிதை போட்டிகளை நடைபெற்றது. இப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்கள். விழாவிற்கு வருகை தந்தவர்களை தமிழாசிரியர் திருமதி ஜனனி வரவேற்று பேசினார். விழா ஏற்பாடுகளை அனைத்து ஆசிரியர்களும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களும் ஏற்பாடு செய்தனர். இறுதியில் பள்ளியின் கணிதப் பட்டதாரி ஆசிரியர் திருமதி நந்தினி நன்றி கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 1