திருச்சி அந்தநல்லூர் வட்டாரம் கொடியாலம் கிராமத்தில் பருவ நிலைக்கேற்ற இயற்கை வேளாண்மை பயிற்சி

Jul 20, 2026 - 21:52
திருச்சி அந்தநல்லூர் வட்டாரம் கொடியாலம் கிராமத்தில் பருவ நிலைக்கேற்ற இயற்கை வேளாண்மை பயிற்சி

திருச்சி அந்தநல்லூர் வட்டாரம் கொடியாலம் கிராமத்தில் பருவ நிலைக்கேற்ற இயற்கை வேளாண்மை பயிற்சி

திருச்சி மாவட்டம் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் கிரியா சூழல் மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி மையம், திருச்சி இணைந்து நடத்திய பருவநிலைக்கேற்ற இயற்கை வேளாண்மை பற்றிய களப்பயிற்சி அந்தநல்லூர் வட்டாரம் கொடியாலம் கிராமத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியில் வேளாண்மை அறிவியல் நிலைய இணைப் பேராசிரியர் முனைவர் ராதிகா பயிர் சாகுபடியில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். மேலும் அவர் பேசுகையில், இந்த ஆண்டு எல்நினோ தாக்கத்தின் காரணமாக பருவமழை தாமதமாகவோ குறைவாகவோ பெய்யலாம். இத்தகைய சூழ்நிலையை சமாளிக்க விவசாயிகள் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட வேண்டும். இயற்கை விவசாயம் செய்வதன் மூலம் மண் வளம் பாதுகாக்கப்படுவதோடு நீர் பிடிப்பு தன்மையும் அதிகரிக்கும். எனவே விவசாயிகள் இயற்கை வேளாண்மையை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தினார். மேலும் இயற்கை வேளாண்மையின் குறிக்கோள்கள், இயற்கை வேளாண் இடுபொருட்களின் பயன்பாடு மற்றும் பஞ்சகாவியா, மீன் அமிலம், முட்டை கரைசல், ஜீவாமிர்தம் போன்றவற்றின் தயாரிப்பு பற்றிய செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இணைப் பேராசிரியர் முனைவர் கண்ணன் இயற்கை வேளாண்மை முறையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகளான வேப்பங்கொட்டை கரைசல் மற்றும் 3G கரைசல் குறித்து எடுத்துரைத்தார். கிரியா சூழல் மற்றும் வேளாண்மை ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் முனைவர் சிவபாலன் மண்வள மேம்பாடு மற்றும் மண் ஆய்வு செய்வதன் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தினார். விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் இடுபொருள்களான மண்புழு உரம் மற்றும் உயிர் உரங்கள் வழங்கப்பட்டன. மேலும் மண்புழு உரம் தயாரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 1