திருச்சி எடமலைப்பட்டி புதூரில் பள்ளி சிறுவர்களுக்கு கபடி போட்டி : மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்

Jul 26, 2026 - 17:54
Jul 26, 2026 - 18:40
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் பள்ளி சிறுவர்களுக்கு கபடி போட்டி : மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் பள்ளி சிறுவர்களுக்கு கபடி போட்டி : மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்

வீர செல்வி நினைவு தி ஸ்போர்ட் கிளப் ஆகியவை இணைந்து திருச்சி எடமலைப்பட்டி புதூர் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள திடலில் பள்ளி சிறுவர்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது. போட்டியை திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் என்ஜினியர் கார்த்திகேயன் தொடங்கி வைத்து போட்டியில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு எடமலைப்பட்டி புதூர் பகுதி அதிமுக செயலாளர் வசந்தம் செல்வமணி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் ஜெ. பேரவை மாவட்ட செயலாளர் பொன்னர், மாவட்டத் துணைச் செயலாளர் ஜெயஸ்ரீ, மாவட்ட பொருளாளர் மார்க்கெட் கே டி. தங்கராஜ், கவுன்சிலர் அம்பிகாபதி, பகுதி செயலாளர்கள் சுரேஷ் குப்தா, மோகன், எடத்தெரு பாபு, கமலஹாசன், முத்துக்குமார், செல்லப்பா, ராஜ்மோகன், சரவணன், வட்ட செயலாளர்கள் துரைசாமி, சார்லஸ், சுரேஷ் மற்றும் வசந்தகுமார், காஜா பேட்டை சரவணன், அருணாச்சலம், எ.புதூர் சரவணன், பொம்மசி பாலமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போட்டியில் திருச்சி, தஞ்சை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசு தொகை வழங்கப்பட்டன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0