ஐரோப்பா சாரணர் இயக்கத்தின் 100 ஆண்டுகள் நினைவார்த்த அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

Aug 3, 2026 - 20:39
Aug 3, 2026 - 20:43
ஐரோப்பா சாரணர் இயக்கத்தின் 100 ஆண்டுகள் நினைவார்த்த அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

ஐரோப்பா சாரணர் இயக்கத்தின் 100 ஆண்டுகள் நினைவார்த்த அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் ஐரோப்பா சாரணர் இயக்கத்தின் 100 ஆண்டுகள் நினைவார்த்த அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார். தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை தாங்கினார். நிறுவனர் நாசர், ஜலால், பிரேம்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அஞ்சல் தலை சேகரிப்பாளர் இளம்வழுதி பேசுகையில், 2007 ஆம் ஆண்டு உலக சாரணர் இயக்கம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ஐரோப்பிய அஞ்சல் நிர்வாகங்களின் கூட்டமைப்பான PostEurop அறிவித்த EUROPA கருப்பொருளின் கீழ் பல ஐரோப்பிய நாடுகள் சிறப்பு நினைவு அஞ்சல் தலைகளை வெளியிட்டன.

அவற்றில் போர்ச்சுகல் வெளியிட்ட "EUROPA – 100 anos do Escutismo" சாரணர் இயக்கத்தின் 100 ஆண்டுகள் அஞ்சல் தலை அஞ்சல் தலை சேகரிப்பாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த அஞ்சல் தலையில் உலக சாரணர் இயக்கத்தின் நிறுவனரான (Robert Stephenson Smyth Baden-Powell, 1857–1941) உருவம் இடம்பெற்றுள்ளது. அவர் ஒரு பிரிட்டிஷ் இராணுவ அதிகாரி மட்டுமல்லாமல், உலகின் மிகப்பெரிய இளைஞர் இயக்கங்களில் ஒன்றான சாரணர் இயக்கத்தை உருவாக்கிய சமூகச் சிந்தனையாளர் ஆவார். 1907 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பிரவுன்சீ (Brownsea) தீவில் 20 சிறுவர்களுடன் நடத்திய முதல் சாரணர் முகாமே உலக சாரணர் இயக்கத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. அதன் பின்னர் 1908 ஆம் ஆண்டு அவர் எழுதிய "Scouting for Boys" என்ற நூல் உலகம் முழுவதும் சாரணர் இயக்கம் பரவுவதற்கான அடித்தளமாக அமைந்தது. இன்று உலகின் பெரும்பாலான நாடுகளில் கோடிக்கணக்கான சிறுவர்கள் மற்றும் சிறுமியர் சாரணர் மற்றும் வழிகாட்டி (Guides) இயக்கங்களில் பங்கேற்று வருகின்றனர் என்றார்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0