செங்குளத்தான் குழந்தலாயி அம்மன் அ.குமரேசன் சிலம்பம் தற்காப்பு கலைக்கூடம் சார்பில் திருச்சியில் 6வது மாநில அளவிலான சிலம்பம் போட்டி : முன்னாள் அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார்
திருச்சியில் 6வது மாநில அளவிலான சிலம்பம் போட்டி
திருச்சி மாவட்டம், உறையூரில் ஸ்ரீ செங்குளத்தான் குழந்தலாயி அம்மன் அ.குமரேசன் சிலம்பம் தற்காப்பு கலைக்கூடம் சார்பில், சுதந்திர தினத்தை முன்னிட்டு 6வது மாநில அளவிலான சிலம்பம் போட்டி 2026 நடைபெற்றது. நிகழ்ச்சியை தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், திருச்சி மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான கே. என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியைத் தொடங்கி வைத்தார்.
மேலும், போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் சிலம்ப வீரர்களுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார். இந்நிகழ்வில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், செ. எழில்மாறன் செல்வேந்திரன் – கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளர் மற்றும் புதுக்கோட்டை ஆலங்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும், தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பத்தின் சிறப்பை உலகறியச் செய்வதுடன், இளம் தலைமுறையினரிடையே சிலம்பக் கலையின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் இப்போட்டி நடத்தப்பட்டது. தென்காசி, மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட சிலம்பப் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, சுருள் வால் வீழ்ச்சி, வேல் கம்பு, குழு போட்டி போன்ற பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், சேஷா அய்யங்கார் நினைவு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் லட்சுமி நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். மேலும், ரொக்கப் பரிசு பிரிவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ.15,000 ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிலம்ப ஆசான் அ. குமரேசன், நிறுவனர் மற்றும் தலைமைப் பயிற்சியாளர், ஸ்ரீ செங்குளத்தான் குழந்தலாயி அம்மன் அ.குமரேசன் சிலம்பம் தற்காப்பு கலைக்கூடம் மற்றும் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். சிலம்பக் கலையை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லும் வகையில் தொடர்ந்து பல்வேறு போட்டிகள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். “சிலம்பம் நம் பாரம்பரியம்; சிலம்பம் நம் பெருமை” என்ற நோக்கத்துடன் நடைபெற்ற இப்போட்டி சிறப்பான வரவேற்பைப் பெற்றது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0