விவசாயிகளுக்கு பாதுகாவலராக அதிமுக என்றைக்கும் இருக்கும் : த.வெ.க அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேச்சு

Aug 22, 2026 - 18:13
Aug 22, 2026 - 18:14
விவசாயிகளுக்கு பாதுகாவலராக அதிமுக என்றைக்கும் இருக்கும் : த.வெ.க அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேச்சு

விவசாயிகளுக்கு பாதுகாவலராக அதிமுக என்றைக்கும் இருக்கும் : த.வெ.க அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேச்சு

விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அவர்களை வஞ்சித்து வருவதாகவும், காவிரியில் நமக்குரிய பங்கு நீரை உரிய முறையில் பெற முயற்சி எடுக்காமல் மேகதாது பிரச்சனையில் மெத்தனம் காட்டி வரும் தவெக அரசை கண்டித்து திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் தலைமை தாங்கினார்.

முன்னாள் ஆவின் சேர்மன் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு செயலாளர்கள் டி.ரத்தினவேல், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மனோகரன், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் யோகநாதன், திருச்சி புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.என்.சிவகுமார், மகளிர் அணி மாநில இணை செயலாளர் லீமா ரோஸ் மார்ட்டின் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசியதாவது, விவசாயிகள் நலனில் எப்பொழுது அதிமுகவிற்கு அக்கறை உண்டு.அவர்களுக்கு பாதுகாவலராக இருக்கும். ஆனால் இன்றைக்கு த.வெ.க அரசு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யாமல் வஞ்சித்து வருகிறது. மீண்டும் அதிமுக ஆட்சி மலரும் முதலமைச்சராக எடப்பாடி வருவார் என்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகிகள் அரவிந்தன், டிஆர். சுரேஷ்குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஜெயலலிதா பேரவை பொன்னர், ஜெயகுமார், கேடி. தங்கராஜ், ஜாக்குலின், வெல்லமண்டி சண்முகம், வழக்கறிஞர் வனிதா, திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர் கவுன்சிலர் கோ.குஅம்பிகாபதி, பொதுக்குழு உறுப்பினர் அப்பாகுட்டி, மாணவரணி பாலமோகன்ராஜ்,மாநில நிர்வாகிகள் பாலக்கரை சக்திவேல், ராஜாளி சேகர், மற்றும் நிர்வாகிகள், வரகனேரி ராஜேந்திரன் நத்தர்ஷா, சுதாகர், அன்பழகன், பாலாஜி, சிந்தாமணி மகா, ராஜ்மோகன், எடத்தெரு பாபு, வசந்தம் செல்வமணி, செல்லப்பா, கமலஹாசன், ஜான் எட்வர்டு,

 எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார், உறந்தை முத்தையா, விஎம்.குமார், இலியாஸ், எம் ஆர்ஆர். முஸ்தபா, என்டி மலையப்பன், கல்லுக்குழி சுந்தர் சிங், திருநாவுக்கரசு, நத்தர்ஷா மற்றும் பகுதி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் அதிமுக சார்பில் மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் புல்லட் ஜான், மாநில விவசாய பிரிவு துணைச் செயலாளர் பேரூர் கண்ணதாசன், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ஜெயம் ஸ்ரீதர், மற்றும் நிர்வாகிகள் தமிழழகன், புங்கனூர் ஜார்ஜ், சாத்தனூர் வாசு, எஸ்பி முத்து கருப்பன், டைமன் திருப்பதி, சுந்தர்ராஜ், அம்பி பாலு, இபிஏகாம்பரம், விஎன்ஆர் செல்வம் , திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ப.அண்ணாவி, டி.பி.பூனாட்சி, முன்னாள் மாவட்ட செயலாளர் சுப்பு (எ) சுப்பிரமணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மல்லிகா சின்னசாமி, டி.இந்திராகாந்தி, எம்ஐடி.நடராஜன், சுபத்ரா சசிகுமார், சமயபுரம் டி.ராமு, கல்லடிப்பட்டி எம்.கோவிந்தராஜ், ஜெயசீலன், அறிவழகன் விஜய், டி.அறிவழகன், சந்திரமோகன், ஜெ. பேரவை அய்யம்பாளையம் ரமேஷ்,துறையூர் பிரகாஷ் மற்றும் புறநகர் கிழக்கு நிர்வாகிகள் எஸ்பி பாண்டியன், ராவணன், சூப்பர் நடேசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0