தமிழர் வாழ்வியலை எடுத்துரைக்கும் புழங்கு பொருட்கள் காட்சியகம் அமைத்துள்ள சமூக செயற்பாட்டாளர்
தமிழர் வாழ்வியலை எடுத்துரைக்கும் புழங்கு பொருட்கள் காட்சியகம் அமைத்துள்ள சமூக செயற்பாட்டாளர்
திருச்சி புத்தூர் பகுதியில் தமிழர் வாழ்வியலை எடுத்துரைக்கும் புழங்கு பொருட்கள் காட்சியகத்தை திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தனது இல்லத்திலேயே அமைத்துள்ளார். புழங்குப் பொருட்கள் காட்சியகம் குறித்து யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில், ஒரு சமூகத்தின் வரலாறு, பண்பாடு, வாழ்க்கை முறை, தொழில்நுட்ப அறிவு மற்றும் மரபு ஆகியவற்றை அறிந்து கொள்ள உதவும் முக்கியமான ஆதாரங்களில் ஒன்று புழங்கு பொருட்களாகும். மனிதர்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திய பொருட்கள் காலப்போக்கில் பயன்பாட்டிலிருந்து மறைந்தாலும், அவை வரலாற்றுச் சான்றுகளாக மாறுகின்றன.
இத்தகைய பொருட்களை 1995 ஆண்டு முதல் சேகரித்து பாதுகாத்து மக்களுக்கும் மாணவர்களுக்கும் புழங்கு பொருட்கள் காட்சியகம் மூலம் எடுத்துரைத்து வருகிறேன். முன்னோர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திய வீட்டு உபயோகப் பொருட்கள், வேளாண் கருவிகள், சமையல் பாத்திரங்கள், இசைக்கருவிகள், அளவைகள், தொழிற்கருவிகள், நாணயங்கள், விளக்குகள், கல்வி உபகரணங்கள் போன்ற அனைத்தும் புழங்கு பொருட்கள் எனப்படுகின்றன என்றார்.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்குகளுக்கு சென்று மக்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்வதும் அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் குறித்து தெரிந்து கொண்டும் வழக்கொழிந்த பொருட்கள் இருப்பின் அதை சேகரித்தும் வருகிறார். மேலும் இல்லத்தில் பயன்பாடு இல்லாமல் வழக்கொழிந்த புழங்கு பொருட்கள் இருப்பவர்கள் கொடையாக வழங்குபவர்கள் வழங்கலாம் என்றார். தொடர்புக்கு 9842412247
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0