திருச்சி திருவெறும்பூரைச் சேர்ந்த 10 வயது மாணவன் கோஷல் தேஜ்வி கராத்தேவில் கருப்பு பெல்ட் பெற்று சாதனை

Sep 6, 2026 - 17:13
Sep 6, 2026 - 17:14
திருச்சி திருவெறும்பூரைச் சேர்ந்த 10 வயது மாணவன் கோஷல் தேஜ்வி கராத்தேவில்  கருப்பு பெல்ட் பெற்று சாதனை

திருச்சி திருவெறும்பூரைச் சேர்ந்த 10 வயது மாணவன் கோஷல் தேஜ்வி கராத்தேவில் கருப்பு பெல்ட் பெற்று சாதனை

திருச்சி மாவட்டம் திருவரம்பூர் நடராஜபுரத்தை சேர்ந்த தமிழரசன் சொர்ணாம்பிகை அவர்களின் 10 வயது மகன் கோஷல் தேஜ்வி. இவர் அங்குள்ள ஆர் எஸ் கே மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 6 ஆண்டுகளாக அதாவது 4 வயது முதல் திருச்சி மாவட்ட கராத்தே சங்க செயலாளர் எஸ் ஆர் விஜயகுமார் அவர்களிடம் முறையாக கராத்தே பயிற்சி பெற்று வருகிறார்.

அவர் இன்று கராத்தேவில் கருப்பு பட்டயம் மற்றும் சான்றிதழை பெற்றார். பத்து வயது மாணவர் கராத்தேயில் கருப்பு (பட்டையம்) பெல்ட் பெறுவது குறிப்பிடத்தக்கது. பெல்ட் பெற்ற மாணவருக்கு பயிற்சியாளர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் நண்பர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0